பாதாள பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவக் கடவுளான சிவபெருமான் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றான பைரவரின் ஒரு தோற்றம் பாதாள பைரவர் என்பதாகும். திருமால் மனித உருவில் இராமனாக அவதரித்து இராவணன் எனும் சிவபக்தனை கொன்றார். இந்து தொன்மவியலின் அடிப்படியில் கொலை பாவமான பிரம்மஹத்தி தோசம் இராமனை பற்றியது.

இந்த பிரம்மஹத்தி தோசம் நீங்க இராமர் ராமேசுவரம் கடலோரத்தில் இலிங்கம் அமைத்து வழிபட்டார். இராமனின் வழிபாட்டால் சிவபெருமான் அவருடைய பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கினார். அந்த கொலைபாவமான பிரம்மஹத்தி தோசத்தினை சிவபெருமானின் உருவமான பைரவர் தன்னுடைய கால்களால் மிதித்து பாதாளத்திற்கு அனுப்பினார். அதனால் பாதாள பைரவர் என்று பெயர் பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதாள_பைரவர்&oldid=1457170" இலிருந்து மீள்விக்கப்பட்டது