பாதாளகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதாளகங்கை (Patalganga) மகாராட்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (எம்ஐடிசி) [1] கர்ஜத் மற்றும் பன்வேல் அருகே உள்ள ஒரு பெரிய தொழில்துறை பகுதியாகும். இது பாதாள கங்கை ஆற்றிலிருந்து இதன் பெயரைப் பெற்றது. இதனுடைய அருகிலுள்ள நகரம் மற்றும் சந்திப்பு கர்ஜத் ஆகும். இந்நகரின் அருகிலுள்ள மருத்துவமனை திருபாய் அம்பானி மருத்துவமனை.

மோகோபாடா கிராமத்திற்கு அருகில் உள்ள பாதளகங்கை தொழில்துறை பகுதி மகாராட்டிரம் தொழில் மேம்பாட்டுக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட 13 இரசாயன தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். இராசேசுவர் கடவுளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில், பாதள கங்கை ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. பாதாளகங்கை தொழில்துறை பகுதி கலபூர் வட்டத்தின் (22 கி.மி. தொலைவில்) அதிகார வரம்பில் இராய்காட் மாவட்டத்தில் (60 கி.மீ. தொலைவில்) உள்ளது. இப்பகுதி உயரமான மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2010-09-02. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Industrial Areas on MIDC Official Website
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதாளகங்கை&oldid=3395601" இலிருந்து மீள்விக்கப்பட்டது