பாதாமி தொடருந்து நிலையம்
பாதாமி | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கெரூர் சாலை அடகல் 587201,பாகல்கோட் மாவட்டம், கருநாடகம் இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 15°57′33″N 75°40′29″E / 15.9591371°N 75.6747455°E | ||||
| ஏற்றம் | 586 மீட்டர்கள் (1,923 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென் மேற்கு ரயில்வே | ||||
| தடங்கள் | கடாக்–ஹோட்கி வழித்தடம் | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரநிலை (தரை நிலையம்) | ||||
| தரிப்பிடம் | இல்லை | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இயங்குகிறது | ||||
| நிலையக் குறியீடு | BDM | ||||
| மண்டலம்(கள்) | தென் மேற்கு ரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | ஹூப்ளி | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
பாதாமி தொடருந்து நிலையம் (Badami railway station) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தென்மேற்கு ரயில்வேயின் ஹூப்ளி ரயில்வே கோட்டத்தின் கீழ் (நிலையக் குறியீடு: BDM) அமைந்துள்ளது. பாதாமி தொடருந்து நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இவை முக்கியமாக பாதாமி நகரம் மற்றும் அருகிலுள்ள பாதாமி குகைகள், பட்டட்கல், ஐகோல் போன்ற பாரம்பரிய சுற்றுலாத் தலங்களுக்குச் சேவை செய்கின்றன.
வளர்ச்சிகள்
[தொகு]கசேந்திரகர் வழியாக பாதாமி–யெல்பர்கா இடையே புதிய பாதைக்கான (53 கி.மீ) உளவுப் பொறியியல் - மற்றும் போக்குவரத்து ஆய்வு. இந்த புதிய ஆய்வு திசம்பர் 2016 இல் ரயில்வே வாரியத்தால் அனுமதிக்கப்பட்டது மற்றும் உளவுப் பொறியியல் - மற்றும் போக்குவரத்து ஆய்வை நடத்துவதற்கான விரிவான மதிப்பீடு 17.01.2017 அன்று அனுமதிக்கப்பட்டது.[1]
முக்கிய தொடருந்துகள்
[தொகு]பாதாமி வழியாகச் செல்லும்/அங்கிருந்து வரும் தொடருந்துகள்:[2]
- கோல் கும்பாசு விரைவு தொடருந்து
- ஹூப்பள்ளி-செகந்திராபாத் விரைவு தொடருந்து
- ஹுப்பள்ளி-வாரணாசி வாராந்திர விரைவு தொடருந்து
- ஹுப்பால்லி–லோகமான்ய திலக் டெர்மினஸ் விரைவு தொடருந்து (பீஜாப்பூர் வழியாக)
- யஸ்வந்த்பூர்–பார்மர் குளிா்சாதன வசதி விரைவு தொடருந்து
- சோலாப்பூர்-ஹூப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு தொடருந்து
- சோலாப்பூர்-கடக் DEMU பயணிகள் தொடருந்து
- சோலாப்பூர்-தர்வாட் பயணிகள் தொடருந்து
- பிஜாப்பூர்-ஹூப்ளி பயணிகள் தொடருந்து