பாதரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாதரசம் (தனிமம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாதரசம்
80Hg
Cd

Hg

Cn
தங்கம்பாதரசம்தாலியம்
தோற்றம்
silvery
Spectral lines of Mercury (UV not seen)
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் பாதரசம், Hg, 80
உச்சரிப்பு /ˈmɜrkjəri/ or /ˈmɜrkəri/ MER-k(y)ə-ree; other names: /ˈkwɪksɪlvər/; /haɪˈdrɑrdʒɨrəm/ hye-DRAR-ji-rəm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 126, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
200.59(2)
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d10 6s2
2, 8, 18, 32, 18, 2
Electron shells of Mercury (2, 8, 18, 32, 18, 2)
இயற்பியற் பண்புகள்
நிலை liquid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) (நீர்மம்) 13.534 g·cm−3
உருகுநிலை 234.32 K, -38.83 °C, -37.89 °F
கொதிநிலை 629.88 K, 356.73 °C, 674.11 °F
மாறுநிலை 1750 K, 172.00 MPa
உருகலின் வெப்ப ஆற்றல் 2.29 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 59.11 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 27.983 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 315 350 393 449 523 629
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 4, 2 (mercuric), 1 (mercurous)
(mildly basic oxide)
மின்னெதிர்த்தன்மை 2.00 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 1007.1 kJ·mol−1
2வது: 1810 kJ·mol−1
3வது: 3300 kJ·mol−1
அணு ஆரம் 151 பிமீ
பங்கீட்டு ஆரை 132±5 pm
வான்டர் வாலின் ஆரை 155 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு rhombohedral
பாதரசம் has a rhombohedral crystal structure
காந்த சீரமைவு diamagnetic
மின்கடத்துதிறன் (25 °C) 961nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 8.30 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 60.4 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (liquid, 20 °C) 1451.4 மீ.செ−1]]
CAS எண் 7439-97-6
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: பாதரசம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
194Hg syn 444 y ε 0.040 194Au
195Hg syn 9.9 h ε 1.510 195Au
196Hg 0.15% Hg ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
197Hg syn 64.14 h ε 0.600 197Au
198Hg 9.97% Hg ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
199Hg 16.87% Hg ஆனது 119 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
200Hg 23.1% Hg ஆனது 120 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
201Hg 13.18% Hg ஆனது 121 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
202Hg 29.86% Hg ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
203Hg syn 46.612 d β 0.492 203Tl
204Hg 6.87% Hg ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

பாதரசம், இதளியம் அல்லது இதள் (mercury) என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியியல் குறியீடு Hg. இது திரவ நிலையில் காணப்படும். இரசத்தின் அணுவெண் 80. இதளியம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, வெப்பநிலைமானி ஆகியவற்றில் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி கொல்லிகள், இலத்திரனியல் உபகரணங்கள், மின்குமிழ்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இதளியம் பயன்படுத்தப்படுகிறது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் இதளியம் விசத்தன்மை மிக்கது.

பாதரசம்

இரசத்தின் இயல்புகள்[தொகு]

இயற்பியல் இயல்புகள்[தொகு]

இரசம் பாரமான வெள்ளி வெண்மையுள்ள உலோகமாகும். ஏனைய உலோகங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த வெப்பக் கடத்தியாகவும், ஓரளவு மின் கடத்தியாகவும் காணப்படும்.[1]

வேதியியல் இயல்புகள்[தொகு]

பாதரசம் மிகவும் குறைந்த உருகுநிலை யைக் கொண்டது. இதன் உருகுநிலையில்(−38.86 °C) பாதரசத்தின் அடர்த்தி 13.534 g/cm3 ஆக இருக்கும்[2].

இரசத்தின் பயன்பாடுகள்[தொகு]

  • பாதரச ஆவி விளக்கில் பயன்படுகிறது.
  • பல் மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

நச்சுத்தன்மை[தொகு]

உலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது[3].

பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன

இரசவாதம்[தொகு]

இதள்மாற்றியம் என்ற தனித்தமிழ் சொல் இரசவாதம் என்று வடமொழியில் குறிக்கப்படும். சித்தர் இதளினால்(பாதரசம்) தாழ்ந்த மாழைகளை பொன்னாக மாற்றினர் என்று கூறப்படும். இப் பொன்னாக்கம் ஆங்கிலத்தில் alchemy எனப்படும். இதனை அடியாகக் கொண்டே வேதியியலை குறிக்கும் chemistry எனும் சொல் பிறந்தது.[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Hammond, C. R (2000). The Elements, in Handbook of Chemistry and Physics 81st edition. CRC press. ISBN 0849304814. http://www-d0.fnal.gov/hardware/cal/lvps_info/engineering/elements.pdf. 
  2. Macroscopic Properties and Microscopic Models. http://chemed.chem.wisc.edu/chempaths/GenChem-Textbook/Macroscopic-Properties-and-Microscopic-Models.html. 
  3. பக் 71, ஜே. பால்பாஸ்கர் (டிசம்பர், 2002). தமிழக சுற்றுச்சூழல் நேற்று, இன்று, நாளை.... அமைதி அறக்கட்டளை. 
  4. பக் 130, ஞா.தேவநேயப்பாவாணர். பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரசம்&oldid=2486555" இருந்து மீள்விக்கப்பட்டது