பாதமி குடைவரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்சவநாத் குகை

பாதமி குடைவரைக் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதமி என்னும் நகரில் உள்ளது. பாதமி, கி.பி. 6 துடக்கம் 8 ஆம் நூற்றாண்டுகள் வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலை நகரமாக விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது.

பாதமி குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளிற் குடையப்பட்டுள்ளன.