பாண் பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்பாட்டு என்னும் துறையினவாகப் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு பாடல்கள் [1] உள்ளன.

  • தலைவன் பெயர் மக்கள் செல்லும் வழியில் பந்தல் நிழலிலுள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது என்கிறது ஒரு கரந்தைத்திணைப் பாடல். [2]
  • தலைவன் நெஞ்சில் வேல் பாய்வதற்கு முன் மணலில் தெற்றி விளையாடும் மகளிரின் தோள்மேல் கிடந்தான் என்கிறது ஒரு தும்பைத்திணைப் பாடல் [3]
  • மூதிலாளன் போர் என்னும் ஒலி கேட்டதும் தனியனாக முன் வந்து நின்றான். முன்பு நடந்த போரில் பகைவன் வீசிய வாளால் அவன் முன் பல் ஒன்று உடைந்திருந்த்து. இது அவனுக்குச் சிறப்பாக விளங்கியது என்கிறது ஒரு தும்பைத்திணைப் பாடல் [4]
  • புலத்தி துவைத்துத் நரும் வெள்ளாடை எல்லாருக்கும் உண்டு. அனால் பலரால் வெட்டப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் அண்ணல் தன் தோல் என்னும் கவசப் படை மறைக்கக் கிடக்கிறான் என்கிறது ஒரு தும்பைத்திணைப் பாடல் [5]

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பவன் புகழை யாழ் மீட்டும் பாணன் புகழ்ந்து பாடுவது பாண்பாட்டு எனக் குறிப்பிடுகிறது. [6]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 260, 283, 284, 311
  2. வடமோதங்கிழார் பாடல் புறநானூறு 260
  3. அடைநெடுங் கல்வியார் பாடல் புறநானூறு 283
  4. ஓரம்போகியார் பாடல் புறநானூறு 284
  5. ஔவையார் பாடல் புறநானூறு 311
  6. வெண் கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
    கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 137)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்_பாட்டு&oldid=1267571" இலிருந்து மீள்விக்கப்பட்டது