பாண்டியர் குடிப்பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரர்களுக்கும், சோழர்களுக்கும் பல குடிப்பெயர்கள் இருந்தது போலவே பாண்டியர்களுக்கும் பல குடிப்பெயர்கள் இருந்தன.

அவற்றுள் பாண்டியன் என்பது பொதுப்பெயர்.
செழியன், வழுதி, மாறன், பஞ்சவன், கவுரியர், தென்னவன்,துவசர், தென்னர் ஆகியன சங்ககாலத்திலேயே வழங்கப்பட்ட பெயர்கள்.
சடையவர்மன், மாறவர்மன் என்னும் அடைமொழிகளைப் பிற்காலப் பாண்டியர் வரலாற்றில் காணமுடிகிறது.

இந்தக் குடிப்பெயர் அடைமொழிகளுடன் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னர்கள் சிலரும் காணப்படுகின்றனர். இவர்களது பெயர்கள் எந்த மன்னனைக் குறிக்கின்றன என ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியவை.