பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துபிரியா தம்பி
இயக்கம்சிவசேகர்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்540
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்புசக்தி
சயீத் மொஹம்மத்
வினோத்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்
விநியோகம்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 1, 2018 (2018-10-01) –
ஒளிபரப்பில்

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3]

இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா, முல்லை ஆகியோரால் இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரங்கள்[தொகு]

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • ஷீலா - லட்சுமி (சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரின் தாய்)
 • சாந்தி வில்லியம்ஸ் - "பிள்ளையார் பட்டி" பார்வதி (முல்லையின் தாய்)
 • ரோசரி - முருகநாதன் (முல்லையின் தந்தை)
 • சுமங்கலி - காமாட்சி (தனலட்சுமி அம்மா)
 • டேவிட் சாலமன் - ராஜா (தனலட்சுமியின் சகோதரன்)
 • கம்பம் மீனா செல்லமுத்து - கஸ்தூரி
 • சத்யா சாய் - மெஹருன்னிசா (430-)

சிறப்புத் தொடர்கள்[தொகு]

 • மீனாவின் வளைகாப்பு நிகழ்வு தனித் தொடராக ஒளிபரப்பானது. அதில் விஜய் டிவியின் மற்ற திரைத்தொடர்களில் நடித்த நடிகைகள் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்றனர்.
 • ஜீவா - மீனா ஆகியோரின் குழந்தைக்கு பெயரிடும் நிகழ்வும் தனித்தொடராக ஒளிபரப்பானது.
 • பாரதி கண்ணம்மா திரைத்தொடரின் கதாப்பாத்திரங்கள் ஐந்து நாட்கள் இத்தொடரில் தோன்றினர்.
 • ராஜா ராணி திரைத்தொடரில், மீனாவும் முல்லையும் பங்கேற்றதாக காட்சிகள் அமைக்கப்பட்டா.

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் 1 அக்டோபர் 2018 முதல் 21 ஜூன் 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சிக்காக 24 ஜூன் 2019 முதல் இரவு 8 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
1 அக்டோபர் 2018 - 21 ஜூன் 2019
திங்கள் - வெள்ளி
22:00 1-188
24 ஜூன் 2019 -
திங்கள்-வெள்ளி
20:00 189-ஒளிபரப்பில்

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 4.1% 5.5%
2019 3.9% 7.1%
2020 5.2% 7.9%
7.5% 11.4%

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
தெலுங்கு வதினம்மா ஸ்டார் மா 6 மே 2019 ஒளிபரப்பில்
கன்னடம் வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் ஸ்டார் சுவர்ணா 17 ஜூன் 2019 - 16 ஏப்ரல் 2020 275
மராத்தி சஹ குடும்ப் சஹ பரிவார் ஸ்டார் பிரவா 24 பிப்ரவரி 2020 ஒளிபரப்பில்
பெங்காலி பாகலோக்கி ஸ்டார் ஜல்ஷா 31 ஆகஸ்ட் 2020 ஒளிபரப்பில்
மலையாளம் சாந்த்வனம் ஏஷ்யாநெட் 21 செப்டம்பர் 2020 ஒளிபரப்பில்

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 சிறந்த ஜோடி ஹேமா & வெங்கட் ரங்கநாதன் பரிந்துரை
சித்ரா & குமரன் தங்கராஜன் பரிந்துரை

மேற்கோள்கள்[தொகு]

 1. "Upcoming New Vijay TV Serial "Pandiyan Stores"".
 2. "ஆனந்தம் பாணியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடர்". cinema.dinamalar.com. 2018-09-28 அன்று பார்க்கப்பட்டது.
 3. "New TV serial 'Pandian Stores' to premiere soon". timesofindia.indiatimes.com. 2018-09-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த நிகழ்ச்சி
பொண்ணுக்கு தங்க மனசு
20 ஆகஸ்ட் 2018 – 22 ஜூன் 2019
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ்
(21 செப்டம்பர் 2020 - 3 அக்டோபர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
மௌன ராகம்
(24 ஏப்ரல் 2017 - 19 செப்டம்பர் 2020)
செந்தூரப்பூவே