பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லூரி (Pandian Saraswathi Yadav Engineering College) [1] என்பது தொழில்முனைவோரும் அரசியல்வாதியுமான 'இந்த் ரத்தன்' மலேசியா எஸ். பாண்டியன் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும். நாட்டில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் பாண்டியன் இக்கல்லூரியை நிறுவினார். கல்லூரியின் தற்போதைய முதல்வராக வி. தர்மலிங்கம் உள்ளார். [2]

கல்லூரி வளாகமானது 60+ ஏக்கர் பரப்பளவில் அமைதியான, மாசு இல்லா சூழல் உள்ளது. இந்த கல்லூரிக்கு புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

இந்த கல்லூரி 2000 செப்டம்பரில் "ஹிந்த் ரத்தன்" மலேசியா எஸ். பாண்டியன் அவர்களால் நிறுவப்பட்டது.

முதல் தொகுதி மாணவர்கள் (184 மாணவர்கள்) 2004 இல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் பட்டம் பெற்றார். இரண்டாம் தொகுதி (109 மாணவர்கள்) 2005 இல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் பட்டம் பெற்றனர்.

சேர்க்கை[தொகு]

சேர்க்கைக்கான விதிகள் கல்லூரியியன் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இங்கு கற்பிக்கப்படும் பட்டல்களின் விவரங்கள்.

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மொத்த இருக்கைகள்
திட்டம்
மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை (வழக்கமான / 4 ஆண்டுகள்)
மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை (பக்கவாட்டு நுழைவு / 3 ஆண்டுகள்)
பி.இ - இயந்திரப் பொறியியல்
120
36
பி.இ - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
60
24
பி.இ - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
90
24
BE - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
60
24
BE - குடிசார் பொறியியல்
120
24
முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மொத்த இருக்கைகள்
திட்டம்
மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை (வழக்கமான)
மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை (பக்கவாட்டு நுழைவு)
எம்.இ - ஆற்றல் மின்னணுவியல் மற்றும் செயலிகள்
20
-
எம்.இ - பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
20
-
எம்.இ - தொடர்பு அமைப்பு
20
-
எம்.இ - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
20
-
எம்.இ - சுற்றுச்சூழல் பொறியியல்
20
-
எம்.இ - ஆற்றல் பொறியியல்
20
-
எம்.டெக் - ஐ.டி.
20
-

குறிப்புகள்[தொகு]

  1. "PSYEC" (en).
  2. "PSYEC" (en).

வெளி இணைப்புகள்[தொகு]