பாண்டிச்சேரி முற்றுகை (1760)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டிச்சேரி முற்றுகை 1760-1761 என்பது (Siege of Pondicherry 1760-1761) மூன்றாவது கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இப்படைக்கு தலைமை தாங்கியவர் "சர் அயர் கூட்" என்னும் ஆங்கிலேய தளபதியாவார். இதில் பிரித்தானிய படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. செப்டம்பர் 4, 1760 முதல் ஜனவரி 15, 1761 வரை நடைபெற்ற இம்முற்றுகையில் பிரஞ்சு காலனியான புதுச்சேரி பிரித்தானிய படைகள் வசமானது. பின்பு "சர்அயர் கூட்" புதுச்சேரி மாநிலத்தை சூறையாடினர். புகழ் பெற்ற கப்ஸ் கோயிலையும் இடித்தார்.

உசாத்துணை[தொகு]