பாண்டவனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீஜன் பாய், பாண்டவனியின் குறிப்பிடத்தக்க விரிவுரையாளர்

பாண்டவனி (பாண்டவர்களின் பாடல்கள் மற்றும் கதைகள்) என்பது பண்டையகால இந்திய புரானவித காவியமான மகாபாரதத்திலிருந்து கதைகளை விவரிக்கும் ஒரு நாட்டுப்புற பாடல் பாணியாகும். பாடலில் இசைக்கருவியும் அடங்கும். இந்த பாணியில் கதையின் நாயகன் பாண்டவர்களில் இரண்டாவது பீமன் ஆவார்.

நாட்டுப்புற நாடக வடிவங்களில் ஒன்றான இந்த வடிவம், மத்திய இந்திய மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் அண்டை பகுதிகளான மத்தியப் பிரதேசம், ஒரிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இன்றளவும் பிரபலமாக உள்ளது. [1]

ஜாதுராம் தேவாங்கன் மற்றும் டீஜன் பாய் ஆகியோர் இந்த பாணியில் மிகவும் பிரபலமான பாடகர்கள் ஆவர். [2] சமகால கலைஞர்களில், சாந்திபாய் செலக் [3] மற்றும் உஷா பார்லே [4] போன்றவர்களுடன் ரிது வர்மா பிரபலமானவராக உள்ளார். [5]

தோற்றம்[தொகு]

முன்னணி பாடகர் டீஜன் பாய் கருத்துப்படி, இந்த பாடும் பாணியின் தோற்றம் தெரியவில்லை. அந்த காலங்களில் சிலரால் மட்டுமே படிக்க முடியும், ஒருவேளை அவர்கள் தங்கள் கதைகளை தலைமுறை தலைமுறையாக கடந்து சென்றிருக்கலாம். அக்காரணத்தால் இது மகாபாரதம் போலவே பழமையானதாக இருக்கலாம். [6] பாரம்பரியமாக, பாண்டவனி ஆண்களால் பிரத்தியேகமாக நிகழ்த்தப்பட்டது. இருப்பினும், 1980 களிலிருந்து, பெண்களும் பாண்டவனியை வழங்கத் தொடங்கினர்.

பாண்டவனி, ஒவ்வொரு கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்டிற்குட்பட்ட கதை சொல்பவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக (வங்காளத்தின் பால் பாடகர்கள் மற்றும் கதக் கலைஞர்கள் போன்றவை) புரிந்து கொள்ள முடியும்,.அவர்களால் மக்களை மகிழ்விக்க, பண்டைய இதிகாசங்கள், நிகழ்வுகள் மற்றும் கதைகள் தொடர்ந்து விவரிக்கப்படுகின்றன அல்லது கற்பிக்கப்படுகின்றன.

பாணி பற்றி[தொகு]

பாண்டவனி என்பது பாண்டவர்களின் கதைகள் அல்லது பாடல்கள் என்று பொருள்படும். [7] இது மகாபாரதத்தின் பழம்பெரும் சகோதரர்கள் பற்றியதாகும். முன்னணி பாடகர் ஒருவர், இந்த இதிகாசத்திலிருந்து ஒரு பகுதியை,ஒரு கையில் சிறிய மணிகள் மற்றும் மயில் இறகுகள் மற்றும் சில நேரங்களில் கர்தல் (ஒரு ஜோடி சங்குகள்) மற்றொரு கையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு எக்தாரா அல்லது தம்புரா (சரம் கொண்ட இசைக்கருவியுடன்) கொண்டு இயற்றுவதும் பாடுவதுமாக கதை கூறுவார். [8]

ஒரு நிகழ்ச்சியின் போது, கதை விரிகையில், தம்புரா ஒரு குறியாக மாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் அது பீமனின் 'கடா' கதாயுதமாகவும், அல்லது அர்ஜுனின் வில் அல்லது தேராகவும், அல்லது ராணி திரௌபதியின் கூந்தல் அல்லது துஷாசனாகவும் [9] வெளிப்படுகிறது. இது கதையின் பாத்திரங்களை கண்டுகொள்ளவும் கதையை மக்களுக்கு எளிமைகாக எடுத்துக்கூறவும் உதவுகிறது. வேறெந்த பொருகளையும் கதை சொல்வதற்கு கலைஞர்கள் பயண்படுத்துவதில்லை. முகபாவனை, குறல் மாற்றம் மற்றும் கிளர்ச்சியூட்டும் நாடக இயக்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாடகர்-கலைஞர் எப்போதாவது ஒரு அத்தியாயத்தின் முடிவில் அல்லது சொல்லப்படும் கதையில் ஒரு வெற்றியைக் கொண்டாடுவதற்காக, ஒரு ஒழுங்கற்ற நடனத்தில் ஈடுபடுகிறார். பாடகருக்கு பொதுவாக ஹார்மோனியம், தபலா, டோலக், மஞ்சிரா மற்றும் இரண்டு அல்லது மூன்று பாடகர்கள் இசையமைப்பாளர்களின் ஆதரவவாக இருப்பார்கள். [10]

ஒவ்வொரு பாடகரும் தனது தனித்துவமான பாணியை பாடலில் சேர்க்கிறார். சில சமயங்களில் உள்ளூர் வார்த்தைகளைச் சேர்த்து, கதையின் மூலம் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் நுண்ணறிவுகளையும் மேம்படுத்தி விமர்சனம் செய்கிறார்கள். படிப்படியாக, கதை முன்னேறும் போது, கூடுதல் நடன அசைவுகளுடன் செயல்திறன் மிகவும் தீவிரமானதாகவும் அனுபவமிக்கதாகவும் மாறும். ஆச்சரியம் எனும் பாவம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. முன்னணி பாடகர், உடன் வரும் பாடகர்களுடன் தொடர்ந்து உரையாடுகிறார். அவர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள், வர்ணனைகள் மற்றும் குறுக்கீடுகளை வழங்குகிறார்கள்; இதனால் பாடும் பாணி வியத்தகு விளைவை அளிக்கிறது. மகாபாரதத்தின் ஒரு பகுதியே பல மணிநேரங்களுக்கு நிகழ்ச்சியாக நீடிக்கும். எளிமையான கதையாகத் தொடங்குவது முழு நீள பாலாட்டாக மாறுகிவிடும்.

மாறுபாடுகள் (ஷைலி)[தொகு]

  • வேதமதி - தோஹா-சௌபால் அளவீட்டல் எழுதப்பட்ட சப்பல் சிங் சௌஹானின் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட கதையின் பாணி எனக் கூறப்படுகிறது. வேதம் என்பது மேலோட்டமாக உரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாணியை ஜாதுராம் தேவாங்கன் பிரபலமாக்கினார். இந்த பாணியினை பயண்படுத்தும் மற்ற கலைஞர்கள் பூனரம் நிஷாத், ரிது வர்மா, ரே[ மேற்கோள் தேவை ]வாரம் சாஹு.[சான்று தேவை]
  • கபாலிக் - காவியத்தில் உள்ள பகுதிகள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக கலைஞர் சுதந்திரமாக கதையை மாற்றிக்கொள்ளும் பாணி இதுவாகும். கபால் என்ற சொல் இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது கதைத்திறனின் உள்ளடக்கத்தை தெரிவிக்கும் நினைவு அல்லது அனுபவத்தைக் குறிக்கிறது. டீஜன் பாய் பாண்டவனியின் இந்த வகையை வெளிப்படுத்துபவர். உஷா பார்லே, சாந்தி பாய் ஆகியோரும் இந்த பாணியில் நடித்த[ மேற்கோள் தேவை ]வர்கள்.[சான்று தேவை]

பிரபலமான கலாச்சாரத்தின் மீதான தாக்கம்[தொகு]

சத்தீஸ்கரின் நாட்டுப்புற பாடகர்களை தனது நாடகங்களில் பயன்படுத்திய ஹபீப் தன்வீரின் நாடகங்களில் பாண்டவனியின் தாக்கங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. அவர் பாண்டவனியைப் போலவே ஒரு கட்டற்ற கதைசொல்லும் பாணியை உருவாக்கினார்.[சான்று தேவை]

பாண்டவனின் உரையாசிரியர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Tribal affairs felicitates Smt. Teejan Bai
  2. "Narrator, character – Teejan Bai plays all". The Tribune, Chandigarh. 16 November 2002. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  3. Modern Asian Theatre and Performance 1900–2000. 2014. https://books.google.com/books?id=DrL9AgAAQBAJ. பார்த்த நாள்: 30 November 2014. 
  4. "PANDAVANI BY USHA BARLE_KARNA ARJUN SAMWAD_BHILAI NIWAS.wmv – YouTube". youtube.com. Archived from the original on 2015-12-18. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. Pandavani
  6. Teejan Bai Interview பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2001 at the வந்தவழி இயந்திரம்
  7. "The Hindu, 13 December, 2004". Archived from the original on 10 March 2007. பார்க்கப்பட்ட நாள் 27 November 2007.
  8. The Tribune, 16 November 2002
  9. Teejan Bai, Rediff.com
  10. "Ahmedabad, Feb 2000". Archived from the original on 6 November 2004. பார்க்கப்பட்ட நாள் 27 November 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டவனி&oldid=3668125" இலிருந்து மீள்விக்கப்பட்டது