பாணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாணர்கள் என்போர் இசைவாணர்கள். இவர்கள் பல்வகையான இசைக் கருவிகளை முழக்கிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வது உண்டு. யாழ் இவர்களின் முதன்மையான கருவி. பண்ணிசைத் தொழிலால் இவர்கள் பாணர் எனப்பட்டனர். பாணாற்றுப்படை இவர்களின் புறவாழ்க்கையைப் புலப்படுத்தும். பாணாற்றுப்படைப் பாடல்களும், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நூல்களும் இவர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

அகத்திணைப் பாடல்களில் தலைவியின் ஊடலைத் தீர்த்துவைக்கும் வாயில்கள் பன்னிருவரில் ஒருவராக, இவர்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.

திருப்பாணாழ்வார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றோர் சமயம் சார்ந்து வாழ்ந்த பாணர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணர்கள்&oldid=2716556" இருந்து மீள்விக்கப்பட்டது