பாணபத்திரர்
பாணபத்திரர் என்பவர் சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுண பாண்டியனின் அரசவை இசை வாணர் ஆவார். இவர் பாணர் குலத்தைச் சேர்ந்தவராவார். [1]
ஏமநாதனும் போட்டியும்
[தொகு]பாண்டிய நாட்டிக்கு வந்த ஏமநாதன் என்னும் இசைப் புலவன் தன் இசைத் திறனை எடுத்துக்காட்டி பரிசு பெற்றான் பின் தன் இசைத் திறனோடு போட்டியிட ஒருவரும் இல்லை என்று கூறினான் இதைக் கேட்ட பாண்டிய மன்னன் பாணபத்திரரை அழைத்து ஏமநாதனோடு போட்டியிட்டு வெல்ல வேண்டும் என கேட்க போட்டியிட ஒப்புக் கொண்டார் பாணபத்திரர் அதன்படி போட்டியிடும் நாள் குறிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது [2]
விறகு வெட்டியின் பாட்டும் ஏமநாதனின் ஓட்டமும்
[தொகு]போட்டியில் வெல்லது குறித்து மதுரை சொக்கநாதரிடம் முறையிட்டார் பாணபத்திரர், போட்டிக்கு முந்திய நாள் மாலை வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த விறகு வெட்டி ஒருவன் ஏமநாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இளைபாறினான் பிறகு சாதாரிப் பண்ணில் ஓர் இசைப் பாடலை பாடினான் அதைக் கேட்டு வியந்த ஏமாநாதன் வீட்டுக்கு வெளியே வந்து அவனிடம் விசாரித்தான், தான் பாணபத்திரரிடம் சீடனாக இருந்ததாகவும் தனக்கு இசை வரவில்லை என பாணபத்திரர் தன்னை அணுப்பி விட்டதாகவும் கூறினான் இதைக் கேட்டு பாணபத்திரரின் இசைப் புலமையை எண்ணி வியந்த ஏமநாதன் தன் சீடர்களுடன் இரவோடு இரவாக பாண்டிய நாட்டை விட்டு வெளியேறினான் [2]
உண்மை அறிந்த மன்னன்
[தொகு]போட்டி நாளன்று ஏமநாதன் அவைக்கு வராததால் ஏவலர்களை அவரை அழைத்து வர அணுப்பினான் பாண்டிய மன்னன், ஏவலர்கள் ஏமநாதன் வீடு பூட்டி இருக்க கண்டு அக்கம் பக்கம் உள்ள மக்கள் மூலம் விறகு வெட்டி குறித்து அறிந்துக் கொண்டு மன்னனிடம் கூறினார்கள், இது பற்றி பாணபத்திரரிடம் மன்னன் கேட்க தனக்கு அப்படி எந்த ஒரு சீடரும் இல்லை எனவும் தான் போட்டி பற்றி சொக்கநாதரிடம் முறையிட்டதாகவும் கூறினார், இதை கேட்டு வியந்த மன்னன் விறகு வெட்டியாக வந்தது சொக்கநாதர் என அறிந்து மகிழ்ச்சியடைந்தார்[2]
இறைவன் கடிதம் வழங்கல்
[தொகு]ஏமநாதன் வென்ற பாணபத்திரனை இசை பணி செய்ய பணித்தார் இறைவன் இதனால் அரசு பணி விட்டு கோவிலில் இசை பணி செய்தார் காலப்போக்கில் மன்னன் தந்த பொருள்கள் தீர்ந்து வறுமையில் வாடினார், ஒரு நாள் இவர் கனவில் தோன்றிய இறைவன் கவலை வேண்டாம் நாளை நான் தரும் திருமுக ஓலையை எடுத்து சென்று சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பொற்றுக்கொள் என்று கூறி மறைந்தார் பாணபத்திரரும் அவ்வாறே செய்தார் [3]
இறைவன் பலகை வழங்கல்
[தொகு]பாணபத்திரர் நாள்தோறும் சொக்கநாதர் பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் இப்பணி நள்ளிரவிலும் தொடர்ந்தது, ஒரு நாள் ஊரில் பெரும்மழை பொழிந்துக் கொண்டிருந்தது பாணபத்திரரின் உடல் முழுவதும் நனைந்து கால்கள் சேற்றில் புதைந்திருந்தன யாழின் நரம்புகள் மழுங்கின அவர் அதை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு பாடல் பாட வந்தார் இறைவன் ஒரு பொன்னாலான பலகையை அருளி இதன் மீது நின்று பாடுக என்றார் பாணபத்திரரும் அவ்வாறே செய்தார் [4]
பரவலர் பண்பாட்டில்
[தொகு]1965 இல் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் இவரின் கதையின் ஒரு பகுதி இடம்பெற்றது. அப்படத்தில் பாணபத்திரர் பாத்திரத்தை டி. ஆர். மகாலிங்கமும் ஏமநாதன் பாத்திரத்தை டி. எஸ். பாலையாவும் ஏற்று நடித்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வீ. அரசு (ed.). "18. பாணபத்திரன்". மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10 - தமிழில் சமயம் பௌத்தக் கதைகள்,இசைவாணர் கதைகள். இளங்கணி பதிப்பகம். Retrieved 8 May 2025.
- ↑ 2.0 2.1 2.2 "விறகு விற்ற படலம்". தினமலர். Retrieved 8 May 2025.
- ↑ "திருமுகம் கொடுத்த படலம்". தினமலர். Retrieved 8 May 2025.
- ↑ "பலகையிட்ட படலம்". தினமலர். Retrieved 8 May 2025.