பாணன் (அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாணன் என்பவன் தமிழ்நாட்டின் வடபால் இருந்த நாடுகளில் ஒன்றை ஆண்ட தமிழ் அரசன். கி.பி. நாலாம் நூற்றாண்டில் காளத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாணர் பரம்பரையின் முன்னோன்.[1]

தித்தன் வெளியன் உறையூரில் ஆண்டுகொண்டிருந்தபோது இந்தப் பாணன் கட்டி என்னும் அரசனைத் தனக்குத் துணை சேர்த்துக்கொண்டு வெளியனைத் தாக்க வந்திருந்தான். அப்போது அரண்மனையில் இனிய கிணை முழக்கம் கேட்டது. அதனைப் போர்முழக்கம் என எண்ணி அஞ்சிப் போரிடாமலேயே தாக்க வந்த இருவரும் ஓடிவிட்டனர்.[2]

ஆரியப் பொருநன் என்பவன் இந்தப் பாணன் மார்பை வளைத்துத் தாக்கினான். பாணன் திமிரித் தாக்கியபோது ஆரியப் பொருநனின் கை ஒடிந்து தனியை விழுந்துவிட்டது. கணையன் இந்தப் பாணனின் நண்பன். பாணனின் கொடூரச் செயல் கண்டு கணையன் நாணினான்.[3]

பாணனின் நன்னாடு தமிழ்நாட்டின் வடபால் இருந்தது. பொருள் தேடச் சென்ற தமிழர் இந்த நாட்டு வழியாகச் சென்றனர்.[4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாணர் நாடு
  2. பரணர் - அகம் 226
  3. பரணர் - அகம் 386
  4. வடாஅது வல்வேல் பாணன் நன்னாட்டு உள்ளதை ... சோலை அத்தம் மாலை போகி - மாமூலனார் - அகம் 325
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணன்_(அரசன்)&oldid=1286199" இருந்து மீள்விக்கப்பட்டது