பாட்நகர் குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்நகர் குண்டுவெடிப்பு (Patnagarh bombing செய்தி அறிக்கைகளில் பட்நகர் சிப்பம் வெடிகுண்டு என்றும் குறிப்பிடப்படுகிறது) 23 பிப்ரவரி 2018 அன்று இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள பலாங்கிர் மாவட்டத்தின் பாட்நகரில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவமாகும். சௌமியா சேகர் சாகு எனும் 26 வயது மென்பொருள் பொறியாளாரது வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிப்ப குண்டு வெடிப்பினால் அவரது பெரிய அத்தை ஜெமாமணி சாகுஆகியோர் கொல்லப்பட்டனர். திருமணம் ஆன சில நாட்களில் இவர் சிப்ப குண்டு வெடிப்பினால் கொல்லப்பட்டார். இவரது மனைவி ரீமா பலத்த காயமடைந்தார். பல மாத விசாரணைக்குப் பிறகு,சௌமியாவின் தாயாரின் சக ஊழியரைக் கைது செய்தனர்.[1]

நிகழ்வு[தொகு]

23 பிப்ரவரி 2018 அன்று, சௌமியா சேகர் சாகு மற்றும் ரீமா சாகுவின் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, சௌமியா வீட்டிற்கு வந்த சிப்பத்தினைத் திறந்து பார்த்த போது இந்தியாவின் ஒடிசாவின் பாட்நகரில் உள்ள அவர்களின் வீட்டில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அந்த சிப்பத்தில் இருந்த முகவரியானாது அவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாத முகவரியில் இருந்து வந்துள்ளது. அந்த முகவரி இவர்களது வீட்டில் இருந்து சுமார் 230 கிலோ மீட்டர் தூரம் உள்ள ராய்ப்பூர், சத்தீஸ்கரில் உள்ள எச். கே. சர்மா எனும் பெயரில் இருந்து வந்துள்ளது. அதனை பற்றி கூறுகையில் சௌமியா, அந்த சிப்பம் பார்ப்பதற்கு திருமணப் பரிசு போல இருந்தது. அந்த முகவரியில் இருந்தவர் யார் என எனக்குத் தெரியாது, மேலும் ராய்ப்பூரில் எனக்குத் தெரிந்தவர்கள் யாருமே கிடையாது எனக் கூறினார். [2] இந்தக் குண்டு வெடிப்பின் காரணமாக வீட்டின் மேற்கூரை பாதிப்படைந்தது, சுவர்களில் விரிசல்கல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் போது அவரைப் பார்க்க வந்த சௌமியாவின் அத்தை ஜெமாமணிக்கு 90% தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். பலத்த காயங்களுடன் ரீமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். [3]

விசாரணை[தொகு]

இருவரும் தங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். சௌமியா சேகரின் பெற்றோர் கல்லூரி விரிவுரையாளர்கள். சௌமியா பெங்களூரில் உள்ள சப்பானிய மின்னனு நிறுவனத்தில் பணிபுரிந்தார். [2]

வெடிகுண்டு வீசப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும் காவல் துறையினரருக்கு யார் மீதும் சந்தேகம் வலுக்கவில்லை.சௌமியாவின் மனைவி தனது கணவரின் மரணத்தை அறிந்தது புலம்பும் நிகழ்படம் ஊடகங்களில் வெளியான அழுத்தத்தால், காவல்துறையினர் இந்த வழக்கை மாநில தலைநகரில் உள்ள ஒரு உயரடுக்கு காவல் துறை கிளைக்கு மாற்றினர். [2] சௌமியாவின் மனைவியின் முன்னாள் காதலர் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை அடுத்து தன்னார்வ பொய்யறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, [4] அவர் சந்தேக நபர் இல்லை என விடுவிக்கப்பட்டார். காவல் துறையினர் அந்த சிப்பம் எந்த நிறுவனத்தில் இருந்து வந்தது என்பதனைக் கண்டறிந்தனர். ஆனால் வாடிக்கையாளார் பற்றிய நிகழ்படங்கள் கிடைக்கவில்லை. [2]

கைது[தொகு]

ஏப்ரல் 2018 இல், பாலாங்கீர் காவல் துறையினருக்கு அநாமதேய கடிதம் வந்தது, இது சௌமியாவின் "துரோகம்" மற்றும் பணம் இழப்பு காரணமாகவே இந்த சிப்பக் குண்டு வெடிப்பு நடந்ததாக அதில் இருந்தது. அதனை அனுப்பியவர் ஆர்.கே.சர்மா அல்ல, எஸ்.கே. சின்ஹா என்று கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டது, மேலும் அதில் "மூன்று நபர்கள் ஈடுபட்டுள்ளதையும்" குறிப்பிட்டுள்ளது. காவல் புலனாய்வாளர்கள் நான்கு வெவ்வேறு நகரங்களில் ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். இறுதியாக,சௌமியாவின் தாயார் அந்த கடிதத்தினைப் படித்ததில் அதில் உள்ள சொற்றொடர் தனக்கு நன்கு பரிச்சயமானதாக இருந்ததாகக் கூறினார். [5]

சான்றுகள்[தொகு]

  1. "Patnagarh Parcel Bomb Case". newstrend.news. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 "A wedding bomb, a letter and an unlikely suspect". BBC News. 5 May 2018. https://www.bbc.com/news/world-asia-india-43945959. பார்த்த நாள்: 6 May 2018. "A wedding bomb, a letter and an unlikely suspect". BBC News. 5 May 2018. Retrieved 6 May 2018.
  3. "Who sent the wedding gift bomb that killed this newlywed?". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-43497820. பார்த்த நாள்: 12 May 2018. 
  4. "Parcel bomb explosion: Three suspects to undergo polygraph test". 7 March 2018. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/parcel-bomb-explosion-three-suspects-to-undergo-polygraph-test/articleshow/63198350.cms. பார்த்த நாள்: 6 May 2018. 
  5. "Patnagarh parcel bomb case: Crime Branch may take Punjilal to Raipur". http://www.newindianexpress.com/states/odisha/2018/may/03/patnagarh-parcel-bomb-case-crime-branch-may-take-punjilal-to-raipur-1809571.html. பார்த்த நாள்: 12 May 2018.