பாட்டியாலா பார்வையற்றோர் சிறப்பு பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாட்டியாலா பார்வையற்றோர் சிறப்பு பள்ளி
முகவரி
சைஃப்டிபூர் கிராமம், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பின்புறம்
பாட்டியாலா, பஞ்சாப் மாநிலத்தின், 147001
இந்தியா
அமைவிடம்30°22′15″N 76°26′59″E / 30.370893°N 76.449807°E / 30.370893; 76.449807
தகவல்
வகைசிறப்புப் பள்ளி
தொடக்கம்1967
நிலைOpen
மாணவர்கள்60
வகுப்புகள்முன்பருவம்–12th
இணைப்புகள்பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம்
மேலாளர்ஊனமுற்ற நலச் சங்கம்
இணையம்
கண்பார்வையற்றோருக்கான கருவிகள்
கண்பார்வையற்றோர்

பாட்டியாலா பார்வையற்றோர் சிறப்பு பள்ளி என்பது இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தின், பாட்டியாலா நகரில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளி ஆகும். [1][2] ஊனமுற்றோர் நலனுக்கான சங்கத்தின் எஸ்தர் கோலேரியஸ் என்பவரால் 1967 ஆம் ஆண்டில் இப்பள்ளி துவக்கப்பட்டது. [3][1]

முதன்முதலில் நான்கு மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் முன்பருவ பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. இங்கு உள்ள காது கேளாதோருக்கான பள்ளியில் 200 குழந்தைகள் உள்ளனர், இதில் 140 பேர் காதுகேளாதோர் மற்றும் 60 பேர் பார்வையற்றோர்.[1] Hostel facility is also provided free of cost and currently 180 students are staying in the hostel. The schools also provide uniforms, stationary, meals and others free of cost.

கல்வி உதவித்தொகை[தொகு]

கண்பார்வையற்றோருக்காக மதிய அரசும், மாநில அரசும் உதவித்தொகை அளித்து வருகிற்து. மேலும் ஜெர்மன் நாட்டில் cbm நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பண உதவி செய்கின்றனர்.

வகுப்பறையும் கற்பித்தல்முறைகளும்[தொகு]
 • நான்கு புலன்கள் சார்ந்த பயிற்சி அளிக்கபடுகிறது
 • கைவிரல்களுக்கு பயிற்சி அளிக்கபடுகிறது
 • பிரெய்லி முறையில் படிப்பதற்கு மற்றும் எழுதுவதறக்கும் பயிற்சி அளிக்கபடுகிறது
 • பிரெய்லி முறையில் 6 புள்ளிகளைக் கொண்டு 63 வகை சேர்க்கையை உருவாக்கமுடியும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபடுகிறது
 • ஆறாம் வகுப்பிற்கு பிறகு அணைத்து பாடங்களையும் ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு கற்பிக்கபடுகிறது.
 • பிரெய்லி பலகையில் மாணவர்கள் எழுதும் வகையில் ஆணி போன்ற styles என்ற கருவி பயன்படுத்தபடுகிறது
 • டயலோர் பிளாவ் என்பவர் கண்டுபிடித்த taylor frame என்ற கருவி கணக்குகளை செய்ய பயன்படுத்தபடுகிறது.இதில் pegs என்ற மென்பொருள் பயன்படுத்தபடுகிறது.
விளையாட்டு முறைகள்[தொகு]
 • சிறப்பு விளையாட்டுகள் ஒலி அடிப்படையாக கொண்டு பயிற்சி அளிக்கபடுகிறது
 • மேடு பள்ளங்களை அறிந்து நடப்பதற்கு mobilitycane கொண்டு பயிற்சி அளிக்கபடுகிறது
கைத்தொழில்[தொகு]

துண்டு நெய்தல், கூடை பின்ணுதல், இசைக் கருவிகள் வாசித்தல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Patiala School for Deaf". www.patialaschool.org. பார்த்த நாள் 16 November 2014.
 2. "Schools for the deaf". www.islpro.org. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 November 2014.
 3. "SOCIETY FOR WELFARE OF THE HANDICAPPED (REGD)" (PDF). www.uri.org. மூல முகவரியிலிருந்து 29 நவம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 November 2014.