பாட்டா, எக்குவடோரியல் கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாட்டா
Bata
Torre de la Libertad.jpg
பாட்டா-இன் சின்னம்
சின்னம்
நாடு எக்குவடோரியல் கினி
மாகாணம்லிட்டோரல் மாகாணம்
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்2,50,770
இனங்கள்பாட்டெங்கோ
தொலைபேசி குறியீடு08
காலநிலைவெப்பமண்டலப் பருவமழைக் காலநிலை
மமேசு (2019)0.626[1]
medium

பாட்டா (Bata; எசுப்பானிய ஒலிப்பு: [ˈbata]) என்பது எக்குவடோரியல் கினியின் லிட்டோரல் மாகாணத்தில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 173,046 ஆகும். எக்குவடோரியல் கினியாவின் நகரங்களிலேயே மிகப்பெரிய நகரம் இதுவாகும். இது ரியோ முனியின் அட்லாண்டிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. முன்னர் இந்த நகரம் எக்குவடோரியல் கினியின் தலைநகரமாக இருந்தது.

வரலாறு[தொகு]

1969 ஆம் ஆண்டு எசுப்பானிய எதிர்ப்பு கலவரங்களுக்குப் பிறகு, பாட்டாவில் ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்தது. மேலும் 1970கள் மற்றும் 1980 களின் பிற்காலத்தில் ஏற்பட்ட பொருளாதரா தேக்கநிலையும் இந்த நகரத்தினை மிகவும் பாதித்தது.[2] 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் பிற்பகுதியிலும் நாட்டின் எண்ணெய் வளங்கள் நகரத்தின் வளர்ச்சிக்கு உந்துத்தலாக அமைந்தது.

மார்ச் 7, 2021 இல், இந்த நகரத்தில் தொடர்ச்சியான வெடிப்புகள் ஏற்பட்டது. இதன் விளைவாக குறைந்தபட்சம் 105 பேர் இறந்தனர் மற்றும் 615 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [3][4]வெடிப்பினால் நகரத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் சேதமடைந்தன.[5]

பொருளாதாரம்[தொகு]

பாட்டா இப்பகுதியில் உள்ள ஆழமான துறைமுகங்களில் ஒன்றாகும். இருந்தபோதிலும், இங்கு இயற்கை துறைமுகம் இல்லை. மரம் மற்றும் காபி ஆகியவை முக்கிய ஏற்றுமதிகளாக உள்ளன. [6]

போக்குவரத்து[தொகு]

பாட்டா விமான நிலையம் பாட்டாவின் வடக்கே அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]