பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளவரசி அலிஸ்
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி ஆண்ட்ரூ
வாழ்க்கைத் துணை
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஆண்ட்ரூ
(தி. 1903; இற. 1944)
வாரிசு

கிரீஸ் இளவரசி மார்கரிட்டா
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி தியோடோரா
Cecilie, Hereditary Grand Duchess of Hesse
கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி சோபியா
எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
முழுப்பெயர்
விக்டோரியா அலிஸ் எலிசபெத் ஜூலியா மேரி
குடும்பம் பாட்டன்பர்க் மாளிகை
தந்தை பாட்டன்பேர்க்கின் இளவரசர் லூயிஸ்
தாய் எசேயின் இளவரசி விக்டோரியா
பிறப்பு பெப்ரவரி 25, 1885(1885-02-25)
வின்ட்சர் கோட்டை, பெர்க்சயர், இங்கிலாந்து
இறப்பு 5 திசம்பர் 1969(1969-12-05) (அகவை 84)
பக்கிங்காம் அரண்மனை, இலண்டன்
அடக்கம் மகதலேனா மரியாள் தேவாலயம், கெத்சமனி, எருசலேம் (1988 முதல்)
கையொப்பம்

பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (Princess Alice of Battenberg, விக்டோரியா அலிஸ் எலிசபெத் ஜூலியா மேரி; 25 பெப்ரவரி 1885 – 5 டிசம்பர் 1969) எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்பின் தாய் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் மாமியாரும் ஆவார்.

இவர் விக்டோரியாவின் கொள்ளு பேத்தி[1] ஆவார். சிறுவயதில் இவர் இங்கிலாந்து, செர்மன் பேரரசு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவற்றில் வளர்ந்தார். இவர் பிறவி செவிடால் பாதிக்கப்பட்டவர். கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் ஆண்ட்ரூவை 1903 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி எனத் தம் பெயராக பயன்படுத்தினார். 1917 ல் கிரேக்க அரச குடும்பத்தின் பெரும்பகுதி அழியும் வரை அவர் கிரேக்கத்தில் வாழ்ந்து வந்தார். சில வருடங்கள் கழித்து கிரேக்கம் திரும்பியபோது ​​அவருடைய கணவர் கிரேக்க-துருக்கிய போரில் (1919–1922) நாட்டின் தோல்விக்கு ஒரு காரணமாக குற்றம் சாட்டப்பட்டார்.1 935 ஆம் ஆண்டில் கிரேக்க முடியாட்சியின் மறுமலர்ச்சியால் இக்குடும்பத்தினர் மீண்டும் வெளியேற்றபட்டனர். 1930ல் இவர் மனப்பித்தால் பாதிக்கப்பட்டார். பின் சுவிட்சர்லாந்தில் ஒரு மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் கணவனிடமிருந்து தனியாக வாழ்ந்தார். அவர் மனநோய் மீட்புக்குப் பிறகு மீதமிருக்கும் பெரும்பாலான ஆண்டுகள் கிரேக்கத்தில் நன்கொடை மற்றும் சேவைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது ஏதென்சில் தங்கினார். யூத அகதிகளுக்கு தங்குமிடமாக இருந்தார். இதனால் இசுரேல் ஹோலோகாஸ்ட் நினைவுக் கழகத்தின் யாத் வசிம் என்பவரால் "தேசங்களுக்கிடையில் நீதியுள்ளவர்" என அவர் அங்கீகரிக்கப்படுகிறார். போருக்குப் பின் கிரேக்கத்தில் தங்கினார். மார்த்தா மற்றும் மேரி என்ற கிறிஸ்தவ சகோதரி என்று அறியப்பட்ட கன்னியாஸ்திரிகளின் ஒரு செவிலியர் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். கிரேக்கத்தின் இரண்டாம் அரசின் வீழ்ச்சி மற்றும் கிரேக்க இராணுவ ஆட்சி எழுச்சிக்கு பின்னர் 1967ல் அவர் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வாழ தனது மகன் மற்றும் மருமகளால் அழைக்கப்பட்டார். அங்கு அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இறந்தார். 1988 இல் எருசலேத்தில் அவரது உடல் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டது.

தலைப்புகள் மற்றும் பட்டங்கள்[தொகு]

தலைப்புகள்[தொகு]

  • 25 பெப்ரவரி 1885 - அக்டோபர் 6, 1903: பாத்தன்பேர்க்கின் இளவரசி ஆலிஸ் [2]
  • 6 அக்டோபர் 1903 – 5 டிசம்பர் 1969: கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசி ஆண்ட்ரூ [2]
  • 1949 இலிருந்து அவரது இறப்பு வரை சில சமயங்களில் அன்னை ஆலிஸ்-எலிசபெத்[2]

பட்டங்கள்[தொகு]

  • கிரேக்க நாடு கிரீஸ் இராச்சியத்தின் டேன் பெருஞ்சிலுவை புனித ஓல்கா மற்றும் சோபியா (1903) பட்டம்[3]
  • ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சிய அரசின் செஞ்சிலுவை பட்டம் (1913)
  • இறப்புக்குப் பின்:

இசுரேல் இஸ்ரேலின் "தேசங்களுக்கிடையில் நீதியுள்ளவர்" பட்டம் (1993)[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vickers, p. 2
  2. 2.0 2.1 2.2 Ruvigny, p. 71
  3. Montgomery-Massingberd, Hugh (ed.) (1977), Burke's Royal Families of the World, 1st edition, London: Burke's Peerage, p. 214, ISBN 0-85011-023-8CS1 maint: extra text: authors list (link)
  4. பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் - யாட் வசெம் (ஆங்கில மொழியில்)