பாடி பாயிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாடி பாயிடு
Padi Boyd
Padi Boyd.jpg
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மைய ஊடகக் கள அரங்கில் பாயிடு விளக்குதல்
வேறு பெயர்கள்பாத்ரிசியா டி. பாயிடு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்திரெக்சல் பல்கலைக்கழகம், முனைவர்
ஆய்வேடுமுப்பொருள் ஈர்ப்புச் சிக்கலில் தற்போக்குச் சிதறல் (1993)

பாடி பாயிடு (Padi Boyd) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.[1][2]இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.[3]

இளமையும் கல்வியும்[தொகு]

பாயிடு நியூஜெர்சியில் உள்ள பெர்த் அம்பாயில் பிறந்தார். இளமையில் இவருக்கு அறிவியலை விட களைகளிலேயே ஆர்வம் கவிந்திருந்த்து. ஆனால் இவருக்கு உயர்நிலைப் பள்ளியில்கார்ல் சாகனின் அண்டம் தொலைக்காட்சி பட்த்தைப் பார்த்து வானியலில் ஆர்வம் கொண்டார். இவர் நியூஜெர்சியில் உள்ல மெதுச்செனில் வளர்ந்தார். மெதுச்சென் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றுத் தேறினார். இவர் 2015 இல் அப்பள்ளியின் புகழ்ச்சி முற்ற தொடக்க வகுப்பிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4] இவர் தன் வானியல் ஆய்வை வில்லனோவா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பின்போது தொடங்கியுள்ளார். பின்னர் இவர் மேற்பட்டப் படிப்புக்காக திரெக்சல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1993 இல் இயற்பியலிலும் வளிமண்டலவியலிலும் முனைவர் பட்டத்தை ஈட்டியுள்ளார்.[5][6]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் 1993 இல் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் பணிபுரியத் தொடங்கினார். அங்கு இவ்ர் அபுள் விண்வெளித் தொலைநோக்கியி உயர்வேக ஒளியளவிக் குழுவில் பணியற்றினார். இவர் 1995 இல் கோடார்டு X கதிர் வானியல் குழுவில் சேர்ந்து மோக்சே (MOXE) x கதிர் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். இவர் 1997 இல் உரோசி X கதிர் காலக்கணிப்புத் தேடியில் பணிபுரிந்துள்ளார்.[5][6] 2003 முதல் 2008 வரை இவர் உரோசி ஏந்துகளையும் சுவிப்ட் அறிவியல் மைய ஏந்துகளையும் கண்காணித்து வந்தார். பிறகு இவர் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியிலும் அதன் பின்னமைப்புகளிலும் புறக்கோள் அளக்கைச் செயற்கைக் கோள் திடாத்திலும் பணிபுரிந்துள்ளார்.[6]

இசைத் திட்டம்[தொகு]

பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் கப்பெல்லா]] குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குறுந்தட்டை AstroCappella எனும் பெயரில் வெளியிட்டது[7]இத்துடன் வகுப்பறைக்கான கல்விப் பாடப்பொருள்களின் தொகுப்பும் வெளியிடபட்டது. இக்குழு 2001 இல் விரிவாக்கிய AstroCappella 2.0 எனும் மறுபதிப்பையும் கூடுதல் பாடப்பொருள்களுடன் வாசிப்புமட்டும் குறுந்தட்டில் வெளியிட்டது. இக்குழு தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகத்திலும் மேரிலாந்து அறிவியல் மையத்திலும் ஓனோலுலுவில் இலாசு வேகாசிலும் புளொரிடாவில் ஆர்லாந்தோவிலும் பிற இடங்களிலும் நிகழ்ச்சிகளையும் நட்த்தியுள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_பாயிடு&oldid=3020264" இருந்து மீள்விக்கப்பட்டது