பாடியந்தல் பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடியந்தல் பாறை ஓவியங்கள் [1] என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள பாடியந்தல் கிராமத்தின்[2] அருகே அமைந்துள்ள குகையில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்களைக் குறிக்கும். பாடியந்தல் பாறை ஓவிய குகைத்தளம், சோழவாண்டிபுரம் ஆண்டிமலை சமணர் குகைத்தளத்தின் பின்னே அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் இக்குகையினை "இருளன் கல்" என்று அழைக்கிறார்கள்.

அமைவிடம்[தொகு]

பாடியந்தல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2164 ஆகும். இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண்: 605751 ஆகும். இவ்வூர் திருக்கோயிலூரிலிருந்து 14.7 கி.மீ. தொலைவிலும், ஆலம்பாடியிலிருந்து 29.4 கி.மீ. தொலைவிலும், கீழ்வாளையிலிருந்து 35.6 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து மேற்கு நோக்கி 40 கி.மீ. தொலைவிலும், செத்தவரையிலிருந்து 40.7 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 44.7 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 66.4 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. [2]

பாறை ஓவியங்கள்[தொகு]

குதிரை போன்ற பாறை ஓவியம்

குகையின் கூரையில், குதிரை, வில் மற்றும் அம்பு போன்ற பழங்கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இங்கு மான்தோல் போன்ற வடிவத்தில் ஒரு விரிப்பு சிறப்பாகத் தீட்டப்பட்டுள்ளது. தரை விரிப்பு குறித்து வரையப்பட்ட பாறை ஓவியம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கிறது. [3] கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் குறியீட்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rock Art Government of Tamilnadu, Department of Archaeology
  2. 2.0 2.1 Padiyanthal Onefivenine
  3. பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் பவுன்துரை, இராசு. சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2004. படம் எண்: 17
  4. Tamizhaga Tolpazhankalamum Poondi agazhvaippagamum. Thulasiraman, D. Chennai, State Department of Archaeology, 2005. பக். 38