உள்ளடக்கத்துக்குச் செல்

பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாடல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது. பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொற்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல்.[1] யாப்பு என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். தொல்காப்பியம் இதனைத் தூக்கு என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.

இலக்கணம்[தொகு]

பாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

திரைப்பாடல்கள்[தொகு]

தற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், வைரமுத்து, வாலி போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

இலக்கியப் பாடல்கள்[தொகு]

பண்டைத் தமிழகத்தில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக கம்பராமாயணமும், கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக திருக்குறளும் காவிய நடையில் தலைசிறந்ததாக சிலப்பதிகாரமும் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடல்&oldid=3746256" இலிருந்து மீள்விக்கப்பட்டது