பாசையூர்
Appearance
பாசையூர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர். இது, பாசையூர் கிழக்கு, பாசையூர் மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் இப்பகுதி, மாநகரசபையின் 7ம் வட்டாரம் ஆகும்.[1] இவ்வூருக்கு மேற்கில் திருநகரும், வடக்கில் ஈச்சமோட்டை, கொழும்புத்துறை என்பனவும், கிழக்கில் கொழும்புத்துறையும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.
இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். பாசையூர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கே 567 மீனவக் குடும்பங்கள் உள்ளன.[2]
வழிபாட்டிடங்கள்
[தொகு]பாசையூரில் கிறிஸ்து அரசர் தேவாலயம், அப்போஸ்தலிக்க தேவாலயம் ஆகிய கிறித்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 22.
- ↑ Statistical Information of the Northern Province - 2014, Northern Provincial Council, 2014. p. 82.
- ↑ "யாழ் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2022-04-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.