பாசு-தெர்
பாசு-தெர் Basse-Terre | |
|---|---|
நகரம் | |
|
மேலே: பாசு-தெர் நகரம்; நடுவில்: குவாதலூப் பேராலயம், பாசு-தெர் நினைவகம்; கீழே: தெல்கிரெசு துறைமுகம், நகர மண்டபம் | |
குவாதலூப்பில் அமைவிடம் (சிவப்பில்) | |
| ஆள்கூறுகள்: 15°59′45″N 61°43′45″W / 15.9958°N 61.7292°W | |
| நாடு | பிரான்சு |
| பெருநகரம் | பாசு-தெர் |
| மண்டலம் | பாசு-தெர் |
| Area 1 | 5.78 km2 (2.23 sq mi) |
| மக்கள்தொகை (சன. 2020) | 9,892 |
| • அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
| INSEE/அஞ்சற்குறியீடு | 97100 |
| 1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
பாசு-தெர் (Basse-Terre, /bæsˈtɛər/, bæss-TAIR; பிரெஞ்சு மொழி: [bɑstɛʁ]) என்பது சிறிய அண்டிலீசில் உள்ள குவாதலூப்பு தீவின் தலைநகரமும், அத்தீவின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். குவாதலூப்பு பிரான்சின் ஆட்சிக்கு உட்பட்டது.[1] இந்நகரம் குவாதலூப்பின் மேற்கு அரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நகர்ப்புறப் பகுதியுடன் சேர்ந்து 2012 இல் 44,864 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது (இவர்களில் 11,534 பேர் பாசு-தெர் நகரில் வாழ்ந்தனர்). இங்கு கால்பந்தாட்டம் பிரபலமான விளையாட்டு ஆகும். வடகிழக்கு மற்றும் வடமேற்கில் சில வேளாண்மை நிலங்களுடன் இந்நகரம் பெரும்பாலும் நகர்ப்புறமாக உள்ளது.[2][3]
மக்கள்
[தொகு]2017 இல் நகரில் 10,058 மக்கள் இருந்தனர். 2017 இல் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 4,732 ஆகும்.[4] 2007 முதல் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1954 | 11,837 | — |
| 1961 | 13,978 | +2.40% |
| 1967 | 15,690 | +1.94% |
| 1974 | 15,457 | −0.21% |
| 1982 | 13,656 | −1.54% |
| 1990 | 14,003 | +0.31% |
| 1999 | 12,410 | −1.33% |
| 2007 | 12,451 | +0.04% |
| 2012 | 11,534 | −1.52% |
| 2017 | 10,058 | −2.70% |
| ஆதாரம்: INSEE[5] | ||
காலநிலை
[தொகு]பாசு-தெர் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலைக்கும், ஒரு வெப்பமண்டல பருவமழைக் காலநிலைக்கும் இடையே ஒரு இடைநிலை புள்ளியில் உள்ளது. இந்த இரண்டு காலநிலை வகைகளைக் கொண்ட நகரங்களில் வழக்கமாக இருப்பது போல், இந்நகரம் ஆண்டு முழுவதும் ஒப்பீட்டளவில் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பாசு-தெர் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 31 (88) |
32 (90) |
31 (88) |
32 (90) |
33 (91) |
33 (91) |
37 (99) |
38 (100) |
33 (91) |
33 (91) |
32 (90) |
32 (90) |
38 (100) |
| உயர் சராசரி °C (°F) | 28 (82) |
28 (82) |
28 (82) |
29 (84) |
30 (86) |
31 (88) |
31 (88) |
31 (88) |
31 (88) |
30 (86) |
29 (84) |
28 (82) |
30 (86) |
| தினசரி சராசரி °C (°F) | 24 (75) |
24 (75) |
25 (77) |
26 (79) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
26 (79) |
25 (77) |
26 (79) |
| தாழ் சராசரி °C (°F) | 20 (68) |
20 (68) |
21 (70) |
22 (72) |
23 (73) |
24 (75) |
24 (75) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
21 (70) |
22 (72) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 15 (59) |
16 (61) |
15 (59) |
16 (61) |
17 (63) |
20 (68) |
20 (68) |
20 (68) |
18 (64) |
20 (68) |
17 (63) |
15 (59) |
15 (59) |
| பொழிவு mm (inches) | 80 (3.15) |
60 (2.36) |
70 (2.76) |
110 (4.33) |
150 (5.91) |
120 (4.72) |
160 (6.3) |
190 (7.48) |
230 (9.06) |
220 (8.66) |
220 (8.66) |
140 (5.51) |
1,750 (68.9) |
| ஆதாரம்: Weatherbase[6] | |||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Commune de Basse-Terre (97105), INSEE
- ↑ Basse-Terre on Google Maps
- ↑ Basse-Terre on the Géoportail from National Geographic Institute (IGN) website
- ↑ Dossier complet: Commune de Basse-Terre (97105), INSEE
- ↑ Historique des populations communales, INSEE
- ↑ "Weatherbase: Historical Weather for Basse-Terre".
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் பாஸ்-தெர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
