பாசுபேட் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபேட் கண்ணாடிகளைத் தோற்றுவிக்கும் அடிப்படை P4O10 அமைப்பு.

பாசுபேட் கண்ணாடி (Phosphate glass) என்பது பல்வேறு உலோகங்களின் மெட்டாபாசுபேட்டுகள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஒளியியற் கண்ணாடி ஆகும். கண்ணாடிகளில் சிலிக்கா (SiO2) இற்குப் பதிலாக, இங்கு கண்ணாடியைத் தோற்றுவுவிக்கும் அடிமூலக்கூறாக பாசுபரசு பென்டாக்சைடு (P2O5) உள்ளது.

பாசுபேட் கண்ணாடி கதிரேற்பு அளவுமானி கதிர்வீச்சினை அளவிடப் பயன்படும். இப்படிப் பட்ட கண்ணாடிச் சில்லுகள் கதிர்வீச்சிற்கு ஆட்படுத்தப்பட்டு, பின் இந்தச் சில்லுகளை புற ஊதாக் கதிர்களால் தாக்கும் போது அவைகள் ஒளிக்கதிர்களை வெளியிடுகின்றன. இவ்வொளியின் அளவு ஏற்றுக் கொண்ட கதிர்வீச்சளவிற்கு நேர்வீதத்தில் இருக்கிறது. இப் பண்பைப் பயன்படுத்தி கதிர்வீச்சளவினை அளவிடலாம். ஏற்பளவினையு்ம் கணக்கிடலாம்.[1] அதற்காக தனிக் கருவிகளுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Phosphate glass dosimeter". European Nuclear Society. 4 ஜூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 March 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபேட்_கண்ணாடி&oldid=3562599" இருந்து மீள்விக்கப்பட்டது