பாசில் யோசப் மாத்யூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசில் யோசப் மாத்யூசு (Basil Joseph Mathews) (28 ஆகஸ்ட் 1879 - 29 மார்ச் 1951) ஓர் ஆங்கில வரலாற்றாசிரியரும், சுயசரிதை எழுத்தாளரும், கிறித்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் எழுத்தாளரும் ஆவார்.

இவரது ஆரம்ப வாழ்க்கையில், ஒரு நூலகராகவும், ஒரு பத்திரிகையாளராகவும் இலண்டன் மறைபணி சங்கத்தின் ஆசிரியர் செயலாளராக இருந்தார். முதல் உலகப் போரின்போது இவர் தகவல் அமைச்சகத்தில் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மேத்யூசு 1879 இல் ஆக்சுபோர்டில் பிறந்தார், காப்பீட்டு தரகரான ஏஞ்சலோ ஆல்பிரட் ஆன்கின்சு மேத்யூசு - எம்மா கோல்க்ரோவ் ஆகியோரின் மூத்த மகனாவார்.[1] சிறுவர்களுக்கான ஆக்சுபோர்டு உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, இவர் போட்லியன் நூலகத்திலும், ஆக்சுபோர்டு நகர நூலகத்தில் பணியாற்றினார். பின்னர் ஆக்சுபோர்டின் மான்ஸ்பீல்ட் கல்லூரியின் முதல்வர் ஆண்ட்ரூ மார்ட்டின் பேர்பெயின் என்பவரின் செயலாளாக இருந்தார். பின்னர் இவர் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேட் செய்து 1904 இல் நவீன வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

தொழில்[தொகு]

பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, இவர் கிறிஸ்தவ உலகம் (Christian World) என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 1910ஆம் ஆண்டு உலக மறைபணி மாநாட்டில் அறிக்கை அளித்துவிட்டு இலண்டன் மறைபணி அமைப்பின் ஆசிரியர் செயலாளரானார். 1913 ஆம் ஆண்டில், இசுக்கொட்லாந்து மறைபணியாளாரான டேவிட் லிவிங்ஸ்டனின் வாழ்க்கை வரலாற்றை இவர் தனது முதல் புத்தகமாக வெளியிட்டார். 1917 முதல் 1918 வரை, முதல் உலகப் போரின்போது, இவர் தகவல் அமைச்சகத்தில் பணியாற்றினார்.[1]

அத்துடன் மதத்தின் வரலாறு, இயேசுவின் வாழ்க்கை உட்பட பல நூல்களை வெளியிட்டார். புக்கர் டி. வாஷிங்டன், ஜான் மோட் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார். "உலகம் முழுவதும் உங்கள் குழந்தைகள் தங்கள் பாடலைப் பாடுகிறார்கள்" ( Far round the world thy children sing their song) என்ற பாடலையும் இவர் எழுதினார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

1911 ஆம் ஆண்டில், மேத்யூசு தனது முதல் மனைவியுடன், ரெய்கேட், சர்ரேயில் வசித்து வந்தார்.[3] இவரது தந்தை 1928 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டுக்கு அருகிலுள்ள போர்ஸ் ஹில்லில் இறந்தார். இவரது தாயார் தொண்ணூறு வயதில் 1948 இல் இறந்தார்.[4]

இவரது முதல் மனைவி 1939இல் இறந்தார்.[5] 1940இல், கென்சிங்டனில், இவர் இரண்டாவது முறையாக வின்ப்ரெட் கிரேஸ் வில்சன் என்பவரை மணந்தார்.[6] இவர்,1951 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டின் வார்ன்போர்ட் மருத்துவமனையில் இறந்தார்.[7]

மரியாதைகள்[தொகு]

  • டாக்டர் டாக்டர், பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Norman Goodall, "Mathews, Basil Joseph (1879–1951)" in Oxford Dictionary of National Biography, https://doi.org/10.1093/ref:odnb/34933 accessed 10 February 2021 (subscription required)
  2. "Far round the world thy children sing their song", Hymnary.org, accessed 10 February 2021
  3. B. J. Mathews, 1911 United Kingdom census, Return for 1 Furzefield Crescent, Reigate, ancestry.com, accessed 11 February 2021 (subscription required)
  4. "MATHEWS Angelo Alfred Hankins of West View Boars Hill Berkshire died 30 October 1928 Probate Oxford 10 May to Emma Mathews widow. Effects £439 9s 6d" in Probate Index for England and Wales (1928), p. 260; Burials in the Parish of St Martin & All Saints in the County of Oxford, No. 327, Emma Mathews, West View, Boars Hill, Oxford, buried February 24, 1948, aged 90, ancestry.co.uk, accessed 13 February 2021 (subscription required)
  5. 5.0 5.1 "Mathews, Basil Joseph, (28 Aug. 1879–29 March 1951)" in Who Was Who (London: A & C Black)
  6. "Wilson Winifred G / Mathews / Kensington 1a 566"; "Mathews Basil J / Wilson / Kensington 1a 566" in General Register Office Index to Martiages in England and Wales (1940, 2nd quarter)
  7. "MATHEWS Basil Joseph of the Triangle Cottage Boars Hill" in Probate Index for England and Wales (1951), p. 786

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசில்_யோசப்_மாத்யூசு&oldid=3925354" இலிருந்து மீள்விக்கப்பட்டது