பாசிலோசாரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிலோசாரசு
Basilosaurus
புதைப்படிவ காலம்:இயோசீன் பிற்பகுதி
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

Basilosaurus cetoides (1).jpg
B. cetoides, இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், வாசிங்டன், டி. சி.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கடற்பாலூட்டி
துணைவரிசை: Archaeoceti
குடும்பம்: Basilosauridae
துணைக்குடும்பம்: Basilosaurinae
கோப், 1868
பேரினம்: பாசிலோசாரசு
Harlan 1834
இனங்கள்
வேறு பெயர்கள்
  • சியூக்ளோடான்
    Owen 1839
  • இராச பல்லி

பாசிலோசாரசு (Basilosaurus) அல்லது சியூக்ளோடான் (Zeuglodon) மற்றும் இராச பல்லி (king lizard) எனும் இது, 34 - 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இயோசீன் காலத்தின் கடைசியில் வாழ்ந்த ஆரம்பகால திமிங்கில வகையைச்சார்ந்த ஒரு பேரினமாகும்.[1] இதன் முதல் தொல்லுயிர் படிமம், ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒருவித ஊர்வன என்று நம்பப்பட்டாலும், பின்னர் அது ஒரு கடல் பாலூட்டியாக இருக்க வேண்டுமென்று, இவ்விடத்திலிருந்து பின்னொட்டு (suffix)- "சாரசு" (Saurus), மூலம் பின்னர் கண்டறியபட்டது.[2]

திமிங்கில வரிசை[தொகு]

சிட்டேசியா என்னும் திமிங்கில வரிசையைச் சார்ந்த பாசிலோசாரசு, இயோசீன், மற்றும் ஆலிகோசீன் புவியியற் காலங்களைச் சார்ந்த அடுக்குகளில் இதன் தொன்மப் படிமங்கள் அகப்படுகின்றன. மேலும், அவைகளின் பாசில்கள், எகிப்தின் லிபியா பாலைவனத்திலும், பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவின் பகுதிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன.[3]

பாசிலோசாரஸ், திமிங்கில வரிசையில் இடம்பெற்றிருந்தாலும் அவைகள் கடலில் வாழ்ந்திருக்கவில்லை மாறாக, நிலத்தில் வாழ்ந்த ஊனுண்ணி வரிசையைச் சார்ந்த "கிரியோடான்டா" எனும் கிளையிலிருந்து பரிணமித்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3]

சியூக்ளோடான் வரிசை[தொகு]

தொன்மைப் புவியியல் காலத்தில் இருந்த திமிங்கிலங்களை, ஆதித் திமிங்கிலங்கள் என வகைப்படுத்தப்பட்ட "ஆர்க்கியோசிடி" (Archaeoceti) என்னும் வரிசையில் இந்த "சியூக்ளோடான்" (Zeuglodon) பாகுபடுத்தப்பட்டது. பாசிலோசாரசின் உடலமைப்பு ஏறக்குறைய 70 அடிவரையில் நீண்டும், தற்போதுள்ள திமிங்கிலங்களின் உடலைவிட மெல்லியதாகப் பாம்பு வடிவில் இருந்திருக்கக்கூடுமென்றும், மேலும் இது, மெல்லவே நீரில் நீந்தியிருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  3. 3.0 3.1 3.2 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிலோசாரசு&oldid=2975632" இருந்து மீள்விக்கப்பட்டது