பாசிகுல விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாசிகுல விநாயகர் கோயில்
பெயர்
பெயர்: பாசிகுல விநாயகர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: நாகை
அமைவு: தரங்கம்பாடி எடுத்துக்கட்டி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி

பாசிகுல விநாயகர் கோயில்[தொகு]

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

உருவ அமைப்பு[தொகு]

இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்து இருக்கும், இரண்டு கைகள் வெளியில் தெரியும், ஒரு லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்து காட்சியளிப்பார். பால் அபிஷேகம் செய்யும் போது சிறிய குட்டியானை எப்படி உட்க்கார்ந்து இருக்குமோ அப்படியே உட்கார்ந்து காட்சியளிக்கிறார்.

வரலாறு[தொகு]

   பாசிகுல விநாயகர். சாஸ்தா (ஐயனார்) என்பவர் பாசிகுல விநாயகரை பூஜை செய்ததால் சாத்தனூர் என பெயர் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் எமன்ஐ சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார். பூமாதேவி உடன் எழுந்து வந்து சிவபெருமானியிடம் உலகத்தை என்னால்  தாங்கிக்கொள்ளமுடியாது, எனவே எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி மன்றாடியிருக்கிறார். அப்போது எமனுக்கு உயிர்கொடுத்த இடம்தான் எடுத்துக்கட்டி. தற்போது எடுத்துக்கட்டி சாத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. ஓவ்வொரு ஊரிலும் விநாகர் கோயில் தெரு நுழைவாயிலும், தெரு கடைசியிலும் இருப்பது வழக்கம், ஆனால் இந்த பாசிகுல விநாயகர் சன்னதி மட்டும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது.

தலவிருச்சம்[தொகு]

பெரும்பாலும் விநாயகருக்கு தலவிருச்சம் அரசமரம், அல்லது ஆலமரம் தான் ஏராளமாக கோயில்களில் அமைந்து இருக்கும். இந்த கோயிலுக்கு மட்டும் வன்னி மரம் தான் தலவிருச்சம் மரமாக அமைந்துள்ளது. பாசிகுல விநாயகரை வழிபட்டால் வறுமை நீங்கும். ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றால் அடுத்த கணமே பலன்கிடைக்கும். நவகிரக தோஷத்தால் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால் அவர்களுக்கு இருந்த அத்தனை தடைகளும் நீங்கும். மேலும் திருமண தடை, வேலை கிடைப்பதில் உள்ள தடை, எடுத்த காரியங்கள் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவது, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள் எல்லோரும் இந்த பாசிகுல விநாயகரை தரிசித்து சென்றால் போதும். அவர்கள் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வாழ்வார்கள்.