உள்ளடக்கத்துக்குச் செல்

பாங் பானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங் பானம் அருந்துபவர்கள், ஆண்டு, 1893
பாங்
இராஜஸ்தான் அரசின் அனுதி பெற்ற பாங் விற்பனை கடை

பாங் (Bhang), இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகமாக விளையும் கஞ்சா செடிகளின் உலரவைக்கப்பட்ட இலைகள் மற்றும் மலர் மொட்டுகளிலிருந்து எடுக்கப்படும் பிசின்கள் மற்றும் எண்ணெய்களிலிருந்து பாங் தயாரிக்கப்பப்பட்டு, பால், நெய், சர்க்கரை மற்றும் லஸ்சியில் கலந்து உண்ணப்படுகிறது.[1][2]இந்தியத்துணைக் கண்டத்தில் பாங் பானம் கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்களின் உணவு மற்றும் பானமாக பயன்பாட்டில் இருந்தது. [3][4]

வசந்த காலத்தில் வரும் மகா சிவராத்திரி, வைசாக்கி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளின் போது மக்களுக்கு பாங் பானம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.[5] [6][7]

வட இந்தியாவில் குறிப்பாக வாரணாசி, மும்பை, ஜெய்சல்மேர் மற்றும் புஷ்கர், அரித்துவார் போன்ற நகரங்களில் பாங் பானம் குறிப்பிட்ட கடைகளில் மட்டும் லஸ்சி மற்றும் தண்டை[8] எனும் பால்பொருட்களுடன் கலந்து விற்கப்படுகிறது. [9] பாங் பானம் சிவபெருமானுக்கு உகந்தது..[10]

இந்துமதத்தின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் ஐந்து புனிதமான தாவரங்களில் ஒன்றாக கஞ்சா செடி குறிப்பிட்டுள்ளது. கஞ்சா செடி மகிழ்ச்சியின் ஆதாரம் மற்றும் விடுதலை தரக்கூடியது எனக்கருதப்படுகிறது. தியானத்தின் போது மனதை ஒருமுகப்படுத்த நினைக்கும் சாமியார்கள் பீடியைப் போலவே கஞ்சாவை புகைபிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம் 1985-ன் படி, கஞ்சா செடியின் உற்பத்தி, விற்பனை மற்றும் அந்த செடியின் சில பாகங்களை உண்பதற்கு தடை செய்திருந்தாலும், அதன் இலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மாநில அரசவே நேரடியாக பாங் மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. வட இந்தியாவின் சில மாநிலங்களில் வெற்றிலைப் பாக்கு கடைகளில் பாங் பான விற்பனை சட்டப்பூர்வாக அனுமதிக்கப்படுகிறது.[11]மேலும் கஞ்சா செடிகளின் காய்களிலிருந்து எடுக்கப்படும் பிசினை சரஸ் எனும் போதை மருந்து தயாரிக்கப்படுகிறது.[12]

பாங் பானம் தயாரிக்கும் முறை

[தொகு]
வட இந்தியாவில் பாங் பானம் செய்முறை
கஞ்சா இலைகளைக் கொண்டு செய்யப்படும் பால்பேடா

வாரணாசியில் பாங் பானம் எல்லா நேரங்களிலும் தயாரிக்கப்படுகிறது. கஞ்சா செடியின் பூ மொட்டுகள் மற்றும் இலைகளை மிதமான சுடு நீரில் நனைத்து பின் நன்றாக அரைத்து, பால், நெய் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து நன்கு கலப்பதன் மூலம் பாங் தயாரிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயிலில் அதிகாலை நடக்கும் பிராத்தனையின் போது பக்தர்கள் சிவபெருமானுக்கு பாங் பானம் படைப்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Torkelson, Anthony R. (1996). The Cross Name Index to Medicinal Plants, Vol. IV: Plants in Indian medicine, p. 1674, ISBN 9780849326356, OCLC 34038712. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849326356.
  2. Helen and Frank Schreider; Helen and Frank Schreider (October 1960). "From The Hair of Siva". National Geographic 118 (4): 445–503. 
  3. Staelens, Stefanie (10 March 2015). "The Bhang Lassi Is How Hindus Drink Themselves High for Shiva". Vice.com. Archived from the original on 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  4. Courtwright, David T. (2009). Forces of Habit. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674029-90-3. Archived from the original on 20 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
  5. The reason why Bhang is consumed on Holi
  6. "Right kick for day-long masti". The Times of India. 16 March 2014 இம் மூலத்தில் இருந்து 17 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417154318/https://timesofindia.indiatimes.com/city/delhi/Right-kick-for-day-long-masti/articleshow/32109558.cms. 
  7. "Holi 2014: Festival Of Colors Celebrates Spring (SONGS, PHOTOS)". Huffington Post. 16 March 2014. Archived from the original on 17 March 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  8. Thandai
  9. "Thandai in Mumbai: 12 bars in the city to get more bhang for your buck". GQ India (in Indian English). 9 March 2020. Archived from the original on 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-05.
  10. இந்திய கடவுளின் போதை பானம் `பாங்'
  11. "What Is Bhang? Health Benefits and Safety". vice.com (in ஆங்கிலம்). 17 July 2018. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  12. Charas

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்_பானம்&oldid=4188064" இலிருந்து மீள்விக்கப்பட்டது