பாங் உக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய் ஓவில் உள்ள பாங் உக்
லெய் யூ முன்னில் உள்ள பான் உக்.
மா வானில் உள்ள பாங் உக்

பாங் உக் (சீனம்: 棚屋) என்பது, ஆங்காங்கின் லான்டாவுத் தீவில் தாய் ஓ என்னும் இடத்தில் காணப்படும் ஒரு வகைக் கால் வீடு. இவை நீரில் அல்லது சிறிய கடற்கரைகளில் கட்டப்படுகின்றன. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் சீனத் தலை நிலத்தில் இருந்து ஆங்காங்கிற்குக் குடிபெயர்ந்த மீனவர்களான தான்காக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1] 2000 ஆவது ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிருந்த சில வீடுகள் அழிந்து விட்டன.[2] இவற்றுட் சில மீண்டும் அமைக்கப்பட்டன.

இவ்வகை வீடுகள் ஒரு காலத்தில் நாட்டுப்புற ஆங்காங்கில் உள்ள பல மீன்பிடி நகரங்களிலும், ஊர்களிலும் காணப்பட்டன. ஆனாலும், தாய் ஓவில் மட்டுமே இது பெரிய அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தவிர லெய் யூ முன் ஊரிலும், அங்கு உள்ள மா சான் சுவென் என்னும் சில வீடுகள் உள்ளன. பாங் உக், தான்காக்கள் அல்லது மீனவர்கள் நிலப்பகுதியில் வாழ்வதற்குப் போனபின்பு இவ்வீட்டு வகை அவர்களது படகு வீடுகளில் இருந்து உருவானது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்_உக்&oldid=2223361" இருந்து மீள்விக்கப்பட்டது