பாங்கி சிற்றரசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாங்கி சிற்றரசு (Bhangi Misl) என்பது பஞ்சாபின் அமிர்தசரசு அருகே ஒரு கிராமத்தில் தலைமையிடமாக இருந்த தன்னாட்சியுரிமை கொண்ட சீக்கியச் சிற்றரசுகள் சிற்றரசுகளின் கூட்டமைப்பாகும். இது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்தார் சஜ்ஜா சிங் என்பவரால் நிறுவப்பட்டது. [1] [2] [3] அவர் பாபா பண்டா சிங் பகதூரால் திருமுழுக்குப் பெற்றார். [4] [5] சஜ்ஜா சிங்கும், அவரது வீரர்களும் போதைப்பொருளான பாங்கை (கஞ்சா செடியிவிலிருந்து தயாரிக்கப்பட்ட பானம்) அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த சிற்றரசுக்கு "பாங்கி" என்ற பெயர் வந்தது. [6] [7] சர்தார் சஜ்ஜா சிங் இறந்த பிறகு, பூமா சிங் பதவிக்கு வந்தார். [8]

பாங்கி சிற்றரசின் விரிவாக்கம்[தொகு]

அட்டோக் முதல் முல்தான் வரையிலான ஒரு பகுதியை உள்ளடக்கும் வகையில் இது வலிமையிலும் பிரதேச அளவிலும் வளர்ந்து மேற்கு பஞ்சாப் பிராந்தியத்தில் வலிமையான சக்தியாக உருவெடுத்தது. [9] இருப்பினும், 1760களின் பிற்பகுதியில் தலைமையின் இறப்புகள் சிற்றரசின் சக்தியைக் குறைத்தன.

அதிகார வீழ்ச்சி[தொகு]

பேசின் போரில் இலாகூரை ரஞ்சித் சிங்குக்கு இழக்கும் வரை பாங்கிகள் தவறாக சுகர்ஷாகியா சிற்றரசர்களுடன் பல அதிகாரப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பாங்கி டோப், பாங்கியன்வாலா டோப், பாங்கியன் டி டோப் என்று பெயரிடப்பட்ட புகழ்பெற்ற போர்ப் பீரங்கியான சம்சாமாவை பாங்கி அரசுகள் வைத்திருந்தன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sikh History (2004). "The Bhangi Misal" பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், History of the Sikhs, 2004. Retrieved on 7 September 2016
  2. Singh, Rishi (2015). State Formation and the Establishment of Non-Muslim Hegemony:Post-Mughal 19th-century Punjab. India: Sage Publications India Pvt Ltd, New Delhi, 23 April 2015. ISBN 9789351500759
  3. Dhavan, Purnima (2011). When Sparrows Became Hawks: The Making of the Sikh Warrior Tradition, 1699-1799, p.60. OUP USA Publisher, 3 November 2011.
  4. Jaspreet Kaur (2000). Sikh Ethos: Eighteenth Century Perspective, p.99. Vision & Venture, Patiala, 2000.
  5. Jain, Harish (2003). The Making of Punjab, p. 201. Unistar Books Pvt. Ltd, Chandigarh.
  6. Singh, Bhagata (1993). A History of The Sikh Misals, p. 89. Publication Bureau, Punjabi University, Patiala, 1993.
  7. Seetal, Sohan Singh (1981). The Sikh Misals and the Punjab States, p.11. India: Lahore Book Shop, Ludhiana, 1981.
  8. Sandhu, Jaspreet Kaur (2000). Sikh Ethos: Eighteenth Century Perspective, p.99. Vision & Venture, Patiala, 2000.
  9. McLeod, W. H. (2005). Historical dictionary of Sikhism. Rowman & Littlefield. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-5088-0. https://books.google.com/books?id=ma3G-hjh6SwC&pg=PA35. 
  10. Singh, Khushwant A History of the Sikhs, Volume 1: 1469-1839. Oxford University Press, 2004, Page 198, Footnote 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கி_சிற்றரசுகள்&oldid=3190748" இலிருந்து மீள்விக்கப்பட்டது