பாங்கிலி பிராந்தியம்
பாங்கிலி பிராந்தியம்
Bangli Regency Kabupaten Bangli ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬩᬂᬮᬶ | |
|---|---|
பாலி தீவில் பாங்கிலி பிராந்தியம் | |
| ஆள்கூறுகள்: 8°17′0″S 115°20′0″E / 8.28333°S 115.33333°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| தலைநகரம் | பாங்கிலி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 520.81 km2 (201.09 sq mi) |
| மக்கள்தொகை (2024)[1] | |
| • மொத்தம் | 2,60,526 |
| • அடர்த்தி | 500/km2 (1,300/sq mi) |
| வழிபாடு | |
| • சமயம் |
|
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
| அஞ்சல் குறியீடு | 821xx |
| தொலைபேசி | (+62) 366 |
| வாகனப் பதிவெண்கள் | DK |
| இணையதளம் | banglikab.go.id |
பாங்கிலி பிராந்தியம் (ஆங்கிலம்: Bangli Regency; பாலினியம்: Kabupatén Bangli; இந்தோனேசியம்: Kabupaten Bangli) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் பாங்கிலி (Bangli). இதுவே பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும்,
1907-ஆம் ஆண்டு வரை, பாங்கிலி பிராந்தியம் பாலியின் ஒன்பது இராச்சியங்களில் ஒன்றாக இருந்தது.[2] பாங்கிலி பிராந்தியத்தின் தலைநகரமான பாங்கிலி நகரில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரா கெகான் எனும் புகழ்பெற்ற இந்து கோயில் உள்ளது.
புரா டாலெம் கலிரான் கோயில் (Pura Dalem Galiran), பாங்கிலி நகரில் இருந்து வடமேற்கே 1.4 கி.மீ தொலைவில் உள்ளது.[3] பாங்கிலி நகர மையத்திலிருந்து தெற்கே 1.3 கி.மீ தொலைவில் புரா டாலெம் பெனுங்கேக்கான் கோயில் (Pura Dalem Penunggekan) உள்ளது.[4] இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் நரகத்தில் உள்ள பாவிகளின் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காட்டப்படுகின்றன.
பண்டைய காலங்களில் இருந்து பாங்கிலி பிராந்தியம், பாலி தீவின் இராச்சியங்களில் ஒன்றாக, மிகப் பழைமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கு காரணம்; அதன் பாதுகாக்கப்பட்ட கோயில்கள் மற்றும் அதன் நிலப்பரப்பில் காணப்படும் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுகள் ஆகும்.[5]
வரலாறு
[தொகு]பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தெற்கு மற்றும் கிழக்கு பாலியின் நீர்ப்பாசனத்திற்கான குறிப்பிடத்தக்க நீர் ஆதாரமான பத்தூர் ஏரியின் அமைவிடம் காரணமாக, பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அதன் விலைமதிப்பற்ற நீர் வழங்கல் முறை; பத்தூர் ஏரிப் பகுதியை மிகவும் விரும்பத்தக்க இடமாக மாற்றியது. அதுவே அண்டை ஆட்சியாளர்களிடையே கடுமையான மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[5]
பாங்கிலி பிராந்தியம், பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும். இதன் வடக்குப் பகுதியில் பத்தூர் மலை உள்ளது. உபுட் நகரத்தில் இருந்து கிந்தாமணி வழியாக வடக்கு கடற்கரைக்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அந்த பத்தூர் மலை உள்ளது.[6][7]
பாலினிய இகாகா ஆண்டு
[தொகு]இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய இராச்சியமாக உருவெடுத்தது. இறுதியில் பாங்கிலி நகரம் ஒரு முக்கிய பாலினிய இராச்சியத்தின் தலைநகரமாக மாறியது. பாலினிய நாட்காட்டியில், இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் 1204-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதன் விளைவாக பாலினிய இகாகா ஆண்டு (Balinese Icaka year) உருவானது. அதுவே பாங்கிலி பிராந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அப்பகுதியில் அதிகாரம் மற்றும் நிர்வாக மையமாகவும் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.[5][8]
ஓர் இராச்சியத்தின் தலைநகராக பாங்கிலி முக்கியத்துவம் பெற்றது. கைவினைஞர்கள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்களை பாங்கிலி நகரம் ஈர்த்தது; அப்பகுதியின் செழிப்பான கலாசார மற்றும் கலைப் பாரம்பரியத்திற்குப் பங்களித்தனர். கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பிற கட்டிடக்கலை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் அந்தப் பழைய இராச்சியத்தின் செழிப்பையும்; ஆழமாக வேரூன்றிய ஆன்மீகத்தையும் பிரதிபலிக்கின்றன.[5][9]
நிர்வாக மாவட்டங்கள்
[தொகு]பாங்கிலி பிராந்தியம் 4 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
- சூசுட்
மாவட்டம் - பாங்கிலி மாவட்டம்
- தெம்புக்கு மாவட்டம்
- கிந்தாமணி மாவட்டம்
| நிர்வாக குறியீடு | மாவட்டம் (Kecamatan) | பரப்பு கிமீ 2 | மக்கள் தொகை 2010 | மக்கள் தொகை 2020 | மக்கள் தொகை 2022 | நிர்வாக மையம் | கிராமங்கள் | அஞ்சல் குறியீடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 51.06.01 | சூசுட் | 49.3 | 43,202 | 48,682 | 49,629 | சூசுட் | 9 | 80661 |
| 51.06.02 | பாங்கிலி | 56.3 | 48,267 | 54,438 | 55,507 | பாங்கிலி | 9 | 80611 - 80614 |
| 51.06.03 | தெம்புக்கு | 48.3 | 33,806 | 43,138 | 45,048 | தெம்புக்கு | 6 | 80671 |
| 51.06.04 | கிந்தாமணி | 366.9 | 90,078 | 1,12,463 | 1,16,949 | கிந்தாமணி | 48 | 80652 |
| மொத்தம் | 520.8 | 2,15,353 | 2,58,731 | 2,67,133 | 72 | |||
காலநிலை
[தொகு]பாங்கிலி பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பாங்கிலி | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 28.4 (83.1) |
28.5 (83.3) |
28.6 (83.5) |
29.2 (84.6) |
28.8 (83.8) |
28.1 (82.6) |
27.5 (81.5) |
27.8 (82) |
28.4 (83.1) |
29.3 (84.7) |
29.1 (84.4) |
28.8 (83.8) |
28.54 (83.38) |
| தினசரி சராசரி °C (°F) | 24.4 (75.9) |
24.4 (75.9) |
24.3 (75.7) |
24.4 (75.9) |
24.0 (75.2) |
23.2 (73.8) |
22.8 (73) |
23.1 (73.6) |
23.6 (74.5) |
24.4 (75.9) |
24.5 (76.1) |
24.5 (76.1) |
23.97 (75.14) |
| தாழ் சராசரி °C (°F) | 20.4 (68.7) |
20.4 (68.7) |
20.1 (68.2) |
19.6 (67.3) |
19.3 (66.7) |
18.4 (65.1) |
18.2 (64.8) |
18.4 (65.1) |
18.9 (66) |
19.5 (67.1) |
20.0 (68) |
20.3 (68.5) |
19.46 (67.03) |
| மழைப்பொழிவுmm (inches) | 305 (12.01) |
331 (13.03) |
208 (8.19) |
113 (4.45) |
119 (4.69) |
110 (4.33) |
128 (5.04) |
65 (2.56) |
98 (3.86) |
123 (4.84) |
176 (6.93) |
275 (10.83) |
2,051 (80.75) |
| ஆதாரம்: Climate-Data.org[10] | |||||||||||||
காட்சியகம்
[தொகு]- பாங்கிலி பிராந்திய காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2023, Kabupaten Bangli Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.5106)
- ↑ The nine kingdoms were Gelgel (the original kingdom, based near present-day Klungkung), Klungkung, Karangasem, Gianyar, Badung, Bangli, Buleleng Mengwi and Tabanan. For details, see Adrian Vickers, 2012, Bali, A Paradise Created, Tuttle publishing.
- ↑ "Pura Dalem Galiran, map". google.fr/maps.
- ↑ Pura Dalem Penunggekan, view of the entrance on street camera.
- 1 2 3 4 properties, balicasa. "Bangli regency: Dating back to ancient times, Bangli has a storied past as one of Bali's oldest kingdoms. Its historical significance is evident in the well-preserved temples and cultural heritage that dot the landscape". Balicasa Properties (in english). Retrieved 4 March 2025.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Bangli Regency, map". openstreetmap.org.
- ↑ Dalton, Bill (1988). Indonesia Handbook, 4th edition, p. 435.
- ↑ "Bangli Regency - District of Bali | Nine Kingdom of Bali". www.balitrips.com. Retrieved 4 March 2025.
- ↑ "Bangli Regency, Bali, Indonesia: Traditional and Historical Architecture". Asian Architecture (in ஆங்கிலம்). Retrieved 4 March 2025.
- ↑ "Climate: Bangli". Climate-Data.org. Retrieved 17 November 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பாங்கிலி பிராந்தியம்
பொதுவகத்தில் பாங்கிலி பிராந்தியம் பற்றிய ஊடகங்கள்- அதிகாரப்பூர்வ இணையதளம்