பாங்கயான் மலைகள்

ஆள்கூறுகள்: 40°55′01″N 24°04′58″E / 40.91694°N 24.08278°E / 40.91694; 24.08278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கயான் மலைகள்
கவாலா காடுகளில் இருந்து பனி மூடிய பங்காயோன் மலைகள் தோற்றம்
உயர்ந்த இடம்
உச்சிகூத்ரா
உயரம்1,956 m (6,417 அடி)
இடவியல் புடைப்பு1,773 m (5,817 அடி)[1]
பட்டியல்கள்
ஆள்கூறு40°55′01″N 24°04′58″E / 40.91694°N 24.08278°E / 40.91694; 24.08278
புவியியல்
நாடுகிரேக்கம்
பிராந்திய அலகுகவாலா and செரஸ்

பாங்கயான் மலைகள் (Pangaion Hills, கிரேக்கம்: Παγγαίο‎  ; பண்டைக் கிரேக்கம்Καρμάνιον ) என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். இது கவாலாவிலிருந்து தோராயமாக 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதில் மிக உயர்ந்த சிகரம் 1,956 மீ கொண்ட கூத்ரா சிகரம் ஆகும். இதன் தெற்கே ஏஜியன் கடலும், வடக்கே பிலிப்பி - கவாலா சமவெளிகளும் உள்ளன. இந்த மலைத்தொடரின் ஒரு பகுதி செர்ஸ் பிராந்திய அலகின் தென்கிழக்கு பகுதியிலும், கவாலா பிராந்திய அலகின் வடமேற்கு பகுதி மலைகளின் பெரும் பகுதியையும் உள்ளடக்கியதாக உள்ளது.

உதுமானிய துருக்கியர்கள் இந்த மலைகளை Pınar Dağ ("ஸ்பிரிங் மவுண்ட்") என்று அழைத்தனர். இந்த மலைகளின் ஸ்லாவிக் பெயர் குஷ்னிட்சா (Кушница) அல்லது குஷினிட்சா (Кушиница) என்பதாகும்.

விளக்கம்[தொகு]

பாங்காயோனின் தோற்றம். சு 1500 மீ

இந்த மலைகள் பண்டைய நகரமான பிலிப்பியிலிருந்து ஒரு வளமான சமவெளியின் எதிர்ப்பக்கமாக அமைந்துள்ளன. அவை பழங்கால நாடான சின்டிசில், ஸ்ட்ரூமா, சிரோபோடாமோஸ் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளன. மேலும் மற்றும் ஓரியண்டல் பிளேன் மற்றும் கசுகொட்டை மரம் போன்றவை நிறைந்ததாய் உள்ளது. பங்காயோன் மலைகளில் உள்ள நிகிசியானி, பாலையோச்சோரி போன்ற நகரங்கள் வேளாண் சார்ந்தவை. இங்கு முக்கியமாக தானியங்கள், புகையிலை போன்றவை பியிரிடப்படுகின்றன. மலைகளில் உள்ள ஒரு சிகரத்தில் பழங்கால ஒரு கோட்டையகத்தின் இடிபாடுகள் உள்ளன. இம்மலைப்பகுதியில் பழங்காலத்தில் தங்கமும் வெள்ளியும் வெட்டப்பட்டன. ஏதெனியன் சர்வாதிகாரி பிசிசுட்ரேடசு நாடு கடத்தப்பட்டபோது இம்மலைக்கு அருகில் குடியேறினார். இப்பகுதியில் கிடைத்த ஏராளமான தங்கமும் வெள்ளியும்தான் ஏதெனியர்களை 465 இல் ஒன்பது சாலைகள் ( என்னியா ஹோடோய் ) என்று அழைக்கப்படும் பகுதியில் குடியேற்றம் ஒன்றை உருவாக்க தூண்டியது. குடியேறிகள் அருகிலுள்ள திரேசியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் குடியேற்றம் கைவிடப்பட்டது. இருப்பினும் ஏதெனியர்கள் ஆம்ப்பிபோலிசில் உள்ள தங்கள் குடியேறிகளுடன் அப்பகுதிக்கு திரும்பினார்கள்.

பண்டைய கிரேக்க மற்றும் இலத்தீன் தரவுகளில் பங்கேயன் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இது வெள்ளி, தங்க சுரங்கங்களுக்கும், கப்பல் கட்டும் மரம் மற்றும் டயோனிசசுவின் ஆரக்கிள் போன்றவைக்கும் பிரபலமானது. [2]

இந்த மலைத்தொடரின் பெயரால் பங்காயோ நகராட்சிக்கு பெயர் சூட்டப்பட்டது. மேலும் நகராட்சியின் தலைமையகம் எலிஃப்தெரூபோலி ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Europe Ultra-Prominences: peaklist.org".
  2. D. C. Samsaris, Historical Geography of Eastern Macedonia during the Antiquity (in Greek), Thessaloniki 1976 (Society for Macedonian Studies), pp. 15, 36–41 (digitized version பரணிடப்பட்டது 2017-04-24 at the வந்தவழி இயந்திரம்). ISBN 960-7265-16-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கயான்_மலைகள்&oldid=3527230" இலிருந்து மீள்விக்கப்பட்டது