பாக் மாவட்டம்
பாக் மாவட்டம்
ضلع باغ | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் பகுதியில் அமைந்த பாக் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாகிஸ்தான் |
பிரதேசம் | ஆசாத் காஷ்மீர் |
வருவாய் கோட்டம் | பூஞ்ச் |
தலைமையிடம் | பாக் நகரம் |
அரசு | |
• வகை | District Administration |
பரப்பளவு | |
• மொத்தம் | 770 km2 (300 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 3,71,919 |
• அடர்த்தி | 483/km2 (1,250/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது[2] |
• பேச்சு மொழிகள் | பகாரி மொழி, குஜ்ஜர் மொழி |
தாலுகாக்கள் | 5 |
பாக் மாவட்டம் (Bagh District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பாக் நகரம் ஆகும். 770 [[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு[3] கொண்ட பாக் மாவட்டத்தின், 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 3,71,919 ஆகும்.[4] இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் பாக் என்பதற்கு தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் பாக் கோட்டை உள்ளது.[5]
அமைவிடம்
[தொகு]பாக் மாவட்டத்தின் வடக்கில் முசாஃபராபாத் மாவட்டம், அத்தியான் பாலா மாவட்டம் மற்றும் இந்தியாவில் பாரமுல்லா மாவட்டங்களும், கிழக்கில் அவேலி மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பாக் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[1]
- பாக் தாலுகா
- தீர்கோட் தாலுகா
- ஹரி கெல் தாலுகா
- ரெரா தாலுகா
- பீர்பனி தாலுகா
புவியியல்
[தொகு]பீர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்த பாக் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமான ஹாஜி-பீர் கணவாய் 3421 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டம் மலைக்காடுகளால் சூழ்ந்துள்ளது.[6]
தட்பவெப்பம்
[தொகு]பாக் மாவட்டத்தின் வெப்பம் சாதாரனமாக 2 °C முதல் 40 °C வரை இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Bagh District on AJK map". ajk.gov.pk. AJK Official Portal. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
- ↑ Rahman, Tariq (1996). Language and politics in Pakistan. Oxford University Press. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-577692-8.
- ↑ Bagh District Statistics
- ↑ "Census 2017: AJK population rises to over 4m" (in en-US). The Nation. http://nation.com.pk/national/27-Aug-2017/census-2017-ajk-population-rises-to-over-4m.
- ↑ [1] பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)