பாக்லுங்
பாக்லுங் | |
|---|---|
நகராட்சி & மலை வாழிடம் | |
பாக்லுங் பஜார் | |
நேபாளத்தின் கண்டகி மாகாணத்தின் பாக்லுங் மாவட்டத்தில் பாக்லுங் நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°16′N 83°36′E / 28.267°N 83.600°E | |
| நாடு | |
| மாகாணம் | கண்டகி |
| மாவட்டம் | பாக்லுங் மாவட்டம் |
| நகராட்சி | பாக்லுங் நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 98.01 km2 (37.84 sq mi) |
| ஏற்றம் | 1,020 m (3,350 ft) |
| மக்கள்தொகை (2021) | |
| • மொத்தம் | 56,102 |
| • அடர்த்தி | 570/km2 (1,500/sq mi) |
| • Ethnicities | செத்திரி மகர் நேவார் பிராமணர் தக்லி தலித் |
| • மதங்கள் | இந்து பௌத்தம் & இந்து-பௌத்த கலப்பின மக்கள் |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 33300 |
| இடக் குறியீடு | 068 |
| இணையதளம் | baglungmun |



பாக்லுங் (Baglung), நேபாளம் நாட்டின் கண்டகி மாகாணம், பாக்லுங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இமயமலையில் 1020 மீட்டர் உயரத்தில், காளி கண்டகி ஆழ்பள்ளத்தாக்கில் உள்ள பாக்லுங் நகரம், மாகாணத் தலைநகரான பொக்காராவிற்கு வடமேற்கே 77.7 கிலோமீட்டர் தொலைவிலும்: முக்திநாத்திற்கு 160 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் காளி கண்டகி ஆறு பாய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாக்லுங் நகரத்தின் மக்கள் தொகை 59,270 ஆகும். நேபாளி மொழியை 93.6% பேசுகின்றனர். மகர் மொழி 3.6%, நேபால் பாசா 1.9% மற்றும் பிற மொழிகள் 0.09% அளவில் பேசப்படுகிறது.[1]சராசரி எழுத்தறிவு 79.3% ஆக உள்ளது.[2]
மலை பிராமணர்கள் 31.6%, செத்திரி மக்கள் 24.6%, மகர் மக்கள் 15.5%, சர்கி மக்கள் 10.4%, காமி மக்கள் 5.1%, தோளி மக்கள் 4.7%, நேவார் மக்கள் 3.5%, தாக்கூரி மக்கள் 1.3% மற்றும் பிற இனக்குழுக்கள் 0.24% வாழ்கின்றனர்.[3]
இந்துக்கள் 92.9%, பௌத்தர்கள் 5.7%, இசுலாமியர்கள் 0.6%, கிறித்தவர்கள் 0.5%, ஆன்மவாதிகள் 0.1% மற்றும் பிறர் 0.2% உள்ளனர்.[4]
தட்ப வெப்பம்
[தொகு]பாக்லுங் நகரம் இதமான குளிரும், வெப்பமும் கொண்டது. கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 26.6 °C (79.9 °F) மற்றும் குளிர்கால அதிகபட்ச குளிர் 0 °C (32 °F) ஆக உள்ளது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பாக்லுங் (1991–2020) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 20.9 (69.6) |
23.3 (73.9) |
27.5 (81.5) |
30.8 (87.4) |
31.5 (88.7) |
31.8 (89.2) |
31.3 (88.3) |
31.1 (88) |
30.6 (87.1) |
28.5 (83.3) |
25.6 (78.1) |
||
| தினசரி சராசரி °C (°F) | 13.6 (56.5) |
15.9 (60.6) |
19.8 (67.6) |
23.1 (73.6) |
24.8 (76.6) |
25.8 (78.4) |
26.6 (79.9) |
26.5 (79.7) |
25.6 (78.1) |
22.3 (72.1) |
18.6 (65.5) |
||
| தாழ் சராசரி °C (°F) | 6.2 (43.2) |
8.4 (47.1) |
12.0 (53.6) |
15.4 (59.7) |
18.1 (64.6) |
19.8 (67.6) |
21.8 (71.2) |
21.8 (71.2) |
20.6 (69.1) |
16.1 (61) |
11.5 (52.7) |
7.4 (45.3) |
14.93 (58.87) |
| பொழிவு mm (inches) | 18.3 (0.72) |
25.0 (0.984) |
29.8 (1.173) |
46.7 (1.839) |
139.4 (5.488) |
291.7 (11.484) |
517.0 (20.354) |
443.4 (17.457) |
260.1 (10.24) |
61.6 (2.425) |
16.1 (0.634) |
14.3 (0.563) |
1,863.4 (73.362) |
| ஆதாரம்: FAO[5] JICA[6] | |||||||||||||
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ NepalMap Language
- ↑ NepalMap Literacy
- ↑ NepalMap Caste
- ↑ NepalMap Religion
- ↑ "World-wide Agroclimatic Data of FAO (FAOCLIM)". Food and Agriculture Organization of United Nations. Retrieved 28 October 2024.
- ↑ "ネパール国 全国貯水式水力発電所マスタープラン調査 ファイナルレポート" (PDF). Japan International Cooperation Agency. Archived from the original (PDF) on 6 April 2024. Retrieved 28 October 2024.