பாக்யோங் மாவட்டம்
பாக்யோங் மாவட்டம் | |
---|---|
மாவட்டம்-சிக்கிம் | |
![]() கஞ்சஞ்சங்கா மலை காட்சி முனையிலிருந்து, துசுலுக், பாக்யோங் மாவட்டம் | |
Location in Sikkim | |
ஆள்கூறுகள்: 27°23′N 88°59′E / 27.383°N 88.983°E | |
நாடு | ![]() |
தலைமையகம் | பாக்யோங் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | Mr. Agawane Rohan Ramesh[1] |
• மக்களவை (இந்தியா) | சிக்கிம் மக்களவை உறுப்பினர் |
• மாநிலச் சட்டப் பேரவை |
|
பரப்பளவு | |
• மொத்தம் | 404 km2 (156 sq mi) |
ஏற்றம் | 1,120 m (3,670 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 74,583 |
• அடர்த்தி | 180/km2 (480/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | SK-07 |
முக்கியச் சாலை | |
இந்தியாவில் உயரமான பாலம் |
|
மிகப்பெரிய மைதானம் |
|
இந்தியச் சரணாலயங்கள் |
|
இணையதளம் |
பாக்யோங் மாவட்டம் (Pakyong district) என்பது இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது பாக்யோங் நகரிலிருந்து நிர்வகிக்கப்படுகிறது.[2] கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் மூன்று உட்பிரிவுகளான பாக்யோங், ரங்க்போ, ரோங்லி உட்பிரிவுகள் 2021ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக பாக்யோங் உருவாக்கப்பட்டது.[3] முன்னாள் மாவட்டத்தின் மீதமுள்ள கேங்டாக் கேங்டாக் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. இது இப்போது வடமேற்கில் உள்ள பாக்யோங் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த மாவட்டம் இப்போது மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டம், பூட்டான், சீனா, சிக்கிமின் நாம்சி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]

பாக்யோங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 404 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 74,583 ஆகும்.[4]
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]
பாக்யோங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு:
- சிலிகுரியினீ கேங்டாக்குடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10, பாக்யோங் மாவட்டத்தில் இராங்க்போ மஜிதார் வழியாக சிங்தாம் வரை செல்கிறது.
- பாக்ராகோட்டையினை கேங்டாக்குடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-717அ, பாக்யோங் மாவட்டத்தில் ரேஷி, ரெனாக் முதல் இராணிபூல் அருகே செட்டிபூல் வரை ரோரதாங் மற்றும் பாக்யோங் வழியாகச் செல்கிறது.[5]
- ரெனாக், மென்லாவை நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-717ஆ, ஜுலுக், ரோங்லி வழியாக ஷெரத்தாங் பெரும்பாலும் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[6]
- மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தையும் பாக்யோங் மாவட்டத்தையும் இணைக்கும் சிக்கிமின் மிக நீளமான சாலைப் பாலமான அடல் சேது பாலம் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொடருந்து
[தொகு]தொடருந்து சேவையினை பொறுத்தமட்டில் பணிகள் கட்டுமான நிலையில் உள்ளது. சியோக்-ராங்போ தொடருந்து பாதை பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ராங்போ நகரில் முடிவடையும். இதனை கேங்டாக் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வானூர்தி
[தொகு]சிக்கிமின் ஒரே வானூர்தி நிலையமான பாக்யோங் பசுமை கள வானூர்தி நிலையம் பாக்யோங் மாவட்டத்தின் தலைமையகமான பாக்யோங்கில் அமைந்துள்ளது.


சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]
பாக்யோங் மாவட்டத்தின் சிக்கிம் மாநிலத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
- ரெனாக் சட்டமன்றத் தொகுதி
- சுஜாச்சென் சட்டமன்றத் தொகுதி
- மேற்கு பெண்டம் சட்டமன்றத் தொகுதி
- கந்தாங்-மச்சோங் சட்டமன்றத் தொகுதி
- நாம்சாய்போங் சட்டமன்றத் தொகுதி
முக்கியமான நகரங்கள்
[தொகு]
பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்
- பாக்யோங்
- ரங்க்போ
- ரோரத்தாங்
- ரெனாக்
- ரோங்லி
- மஜிதார்
- கும்ரேக்

காட்டுயிர் காப்பகங்கள்
[தொகு]
பங்கோலாகா வனவிலங்கு சரணாலயம் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வட வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தின் நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, அரிதார் முல்கர்கா ரேச்சேலா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமின் காப்புக் காடுகளும் சரம்சா தோட்டமும் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குப் பல்வேறு வகையான மலர் தாவரங்களும் விலங்குகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

தாவரங்களும் விலங்குகளும்
[தொகு]

பாக்யோங் மாவட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் வனவிலங்குகளும் காணப்படுகின்றன. முக்கியமான விலங்குகளாக மாநில விலங்கான சிவப்பு பாண்டா, மாநில பறவையான டென்ட்ரோபியம் நோபில் மாநில மலர், ரோடோடென்ட்ரான் மாநில மரம் பாக்யோங் மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன.


பிற முக்கியமான காட்டு விலங்குகளில் பனிச்சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, மேகச் சிறுத்தை, பெரிய இந்திய புனுகுப் பூனை போன்றவை அடங்கும்.[7] சிக்கிம் அரசின் வனத்துறை, பாக்யோங் மாவட்டத்தின் பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் 2019 சனவரியில் வங்காளப் புலி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


ஆறுகளும் ஏரிகளும்
[தொகு]ஆறுகள்
[தொகு]
மாநிலத்தின் மிகப்பெரிய ஆறான தீஸ்தா ஆறு பாக்யோங் மாவட்டத்தில் சிங்தாமிலிருந்து ராங்க்போ வரை பாய்கிறது.
சிக்கிமின் மூன்றாவது பெரிய ஆறாக விளங்கும் ரங்க்போ ஆறு, பாக்யோங் மாவட்டத்தின் ரோங்லி துணைப்பிரிவில் உள்ள மென்மேசோ ஏரியிலிருந்து உருவாகி, பாக்யோன்ங் துணைப்பிரிவு, ரோங்லி உட்பிரிவு கிராமங்கள், பாக்யோன் மாவட்டத்தின் நகரங்கள் வழியாகப் பாய்கிறது.
பாக்யோங் மாவட்டத்தில் உள்ள துசுலுக் அருகே உருவாகி பூட்டான், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் நோக்கிப் பாயும் ஜல்தாகா ஆறு.
பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய ஆறுகள் ரிச்சு கோலா, ரோங்லி கோலா, பாச்சே கோலா, ரேசி கோலா ஆகும்.
ஏரிகள்
[தொகு]

பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள்
- லம்போகரி, அரிதார்
- கந்தாங் இதய ஏரி
- ரோலெப்பின் கீழே உள்ள ரங்க்போ அணை ஏரி.
- முல்கர்கா ஏரி (சிக்கிம்-மேற்கு வங்காள எல்லையில் அமைந்துள்ளது)
விளையாட்டு
[தொகு]
பாக்யோங் மாவட்டத்தின் இராங்க்போவில் அமைந்துள்ள சுரங்கத் துடுப்பாட்ட மைதானம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். சிக்கிம் துடுப்பாட்டச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை, சி. கே. நாயுடு கோப்பை, கூச் பெகார் கோப்பை, விஜய் மெர்ச்சன்ட் கோப்பை போன்ற முக்கியமான துடுப்பாட்டக் கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.[8][9] பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய விளையாட்டு மைதானங்கள் தூய சவேரியார் கால்பந்து மைதானம்-பாக்யோங், ரோங்லி மேளா மைதானம், ரெனாக் எஸ்எஸ்எஸ் மைதானம். சுஜாச்சென் எஸ்எஸ்எஸ் மைதானம், மத்திய பெண்டம் எஸ்எஸ்எஸ் மைதாவு போன்றவை ஆகும்.
கல்வி
[தொகு]
பாக்யோங் மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
- சிக்கிம் மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனம், மஜிதார்.
- பாகியம் பாலடைன் கல்லூரி, பாக்யோங்.
- அரசு பட்டப்படிப்பு கல்லூரி, ரெனாக்.
- மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி மையம், பர்தாங்.
- இமாலய மருந்தியல் நிறுவனம், மஜிதார்.
- அரசு தொழிற்பயிற்சி நிலையம், சுரங்கம்.
- தேசிய மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பச்சேகனி.
- ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி, தெகாபாங்.
- ஜவஹர் நவோதயா வித்யாலயா, பாக்யோங்
சாதனைகள்
[தொகு]
- சிக்கிமின் பாக்யோங் மாவட்டம் 8 இடத்தினை இந்திய மாநிலங்கள் 75-களிக்கிடையேயான ஆசாதி செ அந்தியோதயா 90 நாட்கள் போட்டியில் தேர்வில் அடைந்தது.[10]
- சிக்கிமின் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள பாக்யோங் காவல் நிலையம் 2020ஆம் ஆண்டில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பின்படி நாட்டின் சிறந்த பத்து செயல்திறன் கொண்ட காவல் நிலையங்களில் ஏழாவது இடத்தில் உள்ளது.[11]
- பாக்யோங் மாவட்டத்தின் ஐந்து நட்சத்திர உணவகமான விவந்தா சிக்கிம், ஆண்டின் சிறந்த உணவகம் என்ற எச்ஐசிஎசுஏ விருதை வென்றது.[12]
- சிக்கிமின் பாக்யோங்கை சேர்ந்த 9 வயது சிறுமி ஜெட்சென் தோக்னா லாமா, 2022 சனவரி 22 அன்று ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சா ரே கா மா பா லில் சாம்ப்சு என்ற நிகர் காட்சி நிகழ்ச்சியில் வென்றார். [13][14]
படங்கள்
[தொகு]-
துசுலுக்
-
பாங்கோலாகா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படும் பல்வேறு தாவரங்கள்
-
தம்பி காட்சி முனை-துலுக்
-
விசுவ விநாயகர் கோவில் ரெனோக்
-
பாக்யோங் வானூர்தி நிலையம்
-
பாக்யோங் வானூர்தி நிலைய ஓடு பாதை
-
மஜிதாருக்கு அருகில் தீஸ்தா ஆறு
-
காஞ்சன்ஜங்கா மலை, தம்பி காட்சி முனை, துலுக்
-
அரிதாரின் லம்போகாரி (ஏரி).
-
தம்பி தாரா காட்சி முனையிலிருந்து சூலுக் காட்சி
-
கனாதாங் கிராமம்
-
கனாதாங் கிருஷ்ணன் கோவில்
-
இரட்டைவால் குருவி
-
சிலச்சிறகிச் சிரிப்பான்
-
சாம்பல் சிரிப்பான்
-
லுங்துங்
-
லுங்துங் காட்சி முனையிலிருந்து சூரிய உதயம்
-
அரிதார், பாக்யோங் மாவட்டம் சிக்கிம்
-
கனாதாங் பாக்யோங் மாவட்டம் சிக்கிம் குளிர்காலத்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Collectors". sikkim.gov.in.
- ↑ "3 sub-divisions of East Sikkim to form Sikkim's newest district Pakyong -Eastmojo". eastmojo.com (in ஆங்கிலம்).
- ↑ "Sikkim's New District To Become a Transportation Hub". northeasttoday.in (in ஆங்கிலம்).
- ↑ "3 sub-divisions of East Sikkim to form Sikkim's newest district Pakyong -Eastmojo". eastmojo.com (in ஆங்கிலம்).
- ↑ "Doklam effect: Sikkim to get new all-weather highway". newindianexpress.com (in ஆங்கிலம்).
- ↑ "NHIDCL floats tender for road works in Sikkim". constructionweekonline.in.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Sikkim". Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.
- ↑ "For first time Sikkim to host Ranji Trophy matches, Himalayan state allotted three fixtures". nenow.in.
- ↑ "Sikkim to host 3 Ranji Trophy matches for the first time". currentaffairs.adda247.com.
- ↑ "Pakyong Ranked 8th Among Top 10 District of India". www.voiceofsikkim.com.
- ↑ "Pakyong Police Station comes 7th in top performing police stations of India". thenortheasttoday.com. 3 December 2020.
- ↑ "Vivanta Sikkim wins HICSA best hotel of the year award". www.eastmojo.com.
- ↑ "Jetsen Dona Lama Shines on Sa Re Ga Ma Pa Little Champs". indiatodayne.in.
- ↑ "Jetshen Dohna Lama is the winner of Sa Re Ga Ma Pa Li'l Champs season 9". indiatodayne.in.