உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்யோங்

ஆள்கூறுகள்: 27°14′22″N 88°35′46″E / 27.2394°N 88.5961°E / 27.2394; 88.5961
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்யோங்
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி
பாக்யோங் வானூர்தி நிலையம்
பாக்யோங் is located in சிக்கிம்
பாக்யோங்
பாக்யோங்
வடகிழக்கு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் பாக்யோங் நகரத்தின் அமைவிடம்
பாக்யோங் is located in இந்தியா
பாக்யோங்
பாக்யோங்
பாக்யோங் (இந்தியா)
பாக்யோங் is located in ஆசியா
பாக்யோங்
பாக்யோங்
பாக்யோங் (ஆசியா)
ஆள்கூறுகள்: 27°14′22″N 88°35′46″E / 27.2394°N 88.5961°E / 27.2394; 88.5961
நாடு இந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்பாக்யோங் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாக்யோங் நகராட்சி மன்றம்
ஏற்றம்
1,120 m (3,670 ft)
மொழிகள்[1][2]
 • அலுவல் மொழிகள்ஆங்கிலம்
 • வட்டார மொழிகள்குரூங் மொழி, லிம்பு மொழி, மகர் மொழி, சுன்வார் மொழி, நேவாரி மொழி ராய் மொழி, தவாங் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
737 106
தொலைபேசி குறியீட்டு எண்03592
வாகனப் பதிவுSK 07
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான காலநிலை
மக்களவைத் தொகுதிசிக்கிம் மக்களவைத் தொகுதி
இணையதளம்pakyongdistrict.nic.in

பாக்யோங் (Pakyong), வடகிழக்கு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள பாக்யோங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இமயமலையில் அமைந்த இந்நகரம், கடல் மட்டத்திலிருந்து 4646 அடி (1700 மீட்டர்) உயரத்தில் உள்ளது. சிக்கிம் மாநிலத் தலைநகரான கேங்டாக்கிற்கு தெற்கே 24.6 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் உள்ளது. இந்நகரத்தில் பாக்யோங் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய ஆர்க்கிட் மையம் உள்ளது.[3]

போக்குவரத்து

[தொகு]

நெடுஞ்சாலைகள்

[தொகு]

மேற்கு வங்காளத்தையும், சிக்கிமையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 717அ பாக்யோங் நகரம் வழியாகச் செல்கிறது.[4]

தொடருந்து நிலையம்

[தொகு]

இதன் அருகே 21 கிலோமீட்டர் தொலைவில் ராங்போ எனும் ஊரில் தொடருந்து நிலையம் உள்ளது.[5]

வானூர்தி நிலையம்

[தொகு]

இந்நகரத்தில் பாக்யோங் வானூர்தி நிலையம் உள்ளது.

பண்பாடு

[தொகு]

இந்நகரத்தில் நேபாளி மொழி, சிக்கிமிய மொழி, லெப்சா மொழி, திபெத்திய மொழிகள் பேசும் பட்டியல் பழங்குடிகள் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளும் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1977 Sikkim government gazette" (PDF). sikkim.gov.in (in ஆங்கிலம்). Governor of Sikkim. p. 188. Archived from the original (PDF) on 22 July 2018. Retrieved 28 May 2019.
  2. "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). 16 July 2014. p. 109. Archived from the original (PDF) on 2 January 2018. Retrieved 28 May 2019.
  3. National Research Centre for Orchids, Sikkim
  4. "Doklam effect: Sikkim to get new all-weather highway- The New Indian Express".
  5. Rangpo railway station
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்யோங்&oldid=4288681" இலிருந்து மீள்விக்கப்பட்டது