உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்மாரா

ஆள்கூறுகள்: 25°12′32″N 90°37′42″E / 25.2089793°N 90.6284523°E / 25.2089793; 90.6284523
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்மரா
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி
பாக்மரா is located in மேகாலயா
பாக்மரா
பாக்மரா
வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் பாக்மராவின் அமைவிடம்
பாக்மரா is located in இந்தியா
பாக்மரா
பாக்மரா
பாக்மரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°12′32″N 90°37′42″E / 25.2089793°N 90.6284523°E / 25.2089793; 90.6284523
நாடுஇந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்தெற்கு காரோ மலை மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாக்ரா நகராட்சி மன்றம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,131
மொழிகள்
 • வட்டார மொழிகாரோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
794 102
தொலைபேசி குறியீட்டு எண்91 03639
வாகனப் பதிவுML-09
இணையதளம்https://southgarohills.gov.in/

பாக்மாரா (Baghmara), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள தெற்கு காரோ மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்தியா-வங்காளதேசம் எல்லையில் பாயும் சோமேசுவரி ஆற்றின் கரையில் அமைந்த இந்நகரம், மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்மேற்கில் 256 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான சுஜு குகை[1]இந்நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும்; பால்பாக்ராம் தேசியப் பூங்கா 66 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள தில்சா மலையில் உள்ளது. இங்குள்ள மலைக்காடுகளில் ஊணுண்ணித் தாவரமான தாவரக் குடுவைகள் அதிகம் வளர்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 2,351 குடியிருப்புகளும் கொண்ட பாக்மரா நகராட்சியின் மக்கள் தொகை 13,131 ஆகும். அதில் 6,700 ஆண்கள் மற்றும் 6,431 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.8% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 11,169 ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 14.3%, இசுலாமியர் 1.13%, கிறித்தவர்கள் 84.36% மற்றும் பிற சமயத்தினர் 0.20 % வீதம் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்மாரா&oldid=4251282" இலிருந்து மீள்விக்கப்பட்டது