பாக்தாத் மாகாணம்
பாக்தாத் கவர்னரேட்
محافظة بغداد பாக்தாத் மாகாணம் | |
---|---|
Baghdad Governorate | |
ஆள்கூறுகள்: 33°20′N 44°26′E / 33.333°N 44.433°E | |
Count RY and | ஈராக் |
தலைநகரம் | பாக்தாத் |
அரசு | |
• ஆளுநர் | அத்வான் அல் அத்வானி |
• மேயர் | ஜெக்ரா அல்வாச் |
பரப்பளவு | |
• Governorate | 204.2 km2 (78.8 sq mi) |
• நகர்ப்புறம் | 500 km2 (200 sq mi) |
• மாநகரம் | 4,555 km2 (1,759 sq mi) |
மக்கள்தொகை (2019 கணக்கெடுப்பு) | |
• Governorate | 1,39,32,264 |
• நகர்ப்புறம் | 1,15,00,000 |
• பெருநகர் | 1,35,00,000 |
நேர வலயம் | ஒசநே+3 (AST) |
ம.மே.சு. (209) | 0.706[1] high · 2nd of 17 |
இணையதளம் | www |
பாக்தாத் கவர்னரேட் அல்லது பாக்தாத் மாகாணம் (Baghdad Governorate. அரபு மொழி: محافظة بغداد என்று அழைக்கப்படுவது ஈராக்கின் தலைநகர மாகாணம் ஆகும். இது தலைநகர் பாக்தாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருநகர் பகுதியையும் உள்ளடக்கியது. ஈராக்கின் 19 மாகாணங்களில் இந்த மாகாணமே பரப்பளவில் மிகச் சிறியது, ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டது.
விளக்கம்
[தொகு]பாக்தாத் மாகாணம் ஈராக்கின் மிகவும் வளர்சியடைந்த பகுதிகளில் ஒன்றாகும், ஈராக்கின் பெரும்பாலான பகுதிகளை விட சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக இது உள்ளது. ஆனால் 2003 இல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பால் மாகாணம் பெரிதும் சேதமடைந்து. இன்றும் இங்கு வன்முறைகள் தொடர்கின்றன. இது உலகில் பயங்கரவாதம் மிக உயர்ந்த அளவில் நிலவும் பகுதிகளில் ஒன்றான இங்கு, தற்கொலை குண்டுதாரிகள், கொலைக் குழுக்கள் போன்றவை இயங்கிவருகின்றன.
பாக்தாத்தில் டைக்ரிஸ் ஆற்றின் குறுக்கே குறைந்தது 12 பாலங்கள் உள்ளன. இவை நகரின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியுடன் இணைகின்றன. மாகாணத்தின் வடகிழக்கில் பல மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்கள் உள்ளன.
ஈராக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி சதர் நகர மாவட்டம் ஆகும்.
மாகாண நிர்வாகம்
[தொகு]பாக்தாத் மாகாணமானது பாக்தாத் மாகாண சபையால் நிர்வகிக்கப்படுகிறது. பாக்தாத் மாகாண சபையின் பிரதிநிதிகள் பாக்தாத்தின் மாவட்டங்களின் கீழ் சபைகளிலிருந்து தங்கள் சக உறுப்பினர்களால் பல்வேறு மாவட்டங்களின் மக்கள்தொகை விகிதாசாரப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசு
[தொகு]- ஆளுநர்: அத்வான் அல் அத்வானி [2]
- மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): ரியாத் அல் ஆதாத்
மாவட்டங்கள்
[தொகு]- அபு கிரைப்
- அதாமியா
- காதிமியா
- கார்க்
- கர்ராடா
- அல்-மதீன்
- மஹ்மூதியா
- அல்-ருசாஃபா
- சதர் நகரம்
- தாஜி
- அல்-கார்க்
நகராட்சிகள்
[தொகு]- அதாமியா
- கார்க்
- கரடா
- காதிமியா
- மன்சூர்
- சதர் நகரம்
- அல் ரஷீத்
- ருசாஃபா
- புதிய பாக்தாத்
சகோதரி நகரங்கள்
[தொகு]பாக்தாத் மாகாணமானது அமெரிக்காவின் டென்வர்-அரோரா பெருநகரப் பகுதியுடன் சகோதரி உறவு கொண்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Gunmen open fire at Baghdad's new governor's house". thebaghdadpost.com. Archived from the original on 2018-01-01. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.