ஹான் ஹாய் பிரெசிசன் இன்டஸ்ட்ரி கம்பனி லிமிடட் (Hon Hai Precision Industry Co. Ltd.), பன்னாட்டளவில் பாக்சுகான் என அறியப்படுகின்ற இந்தத்தாய்வானிய நிறுவனம் 1974ஆம் ஆண்டு புது தாய்பெய் நகரின் இட்டூசெங் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.2021ஆம் ஆண்டு (ஐஅ$214 பில்லியன்) ஆண்டு வருமானம் ஈட்டும் பன்னாட்டு மின்னணுவியல் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது; பார்ட்சூன் குளோபல் தரவரிசையில் 20ஆம் இடத்தைப் பற்றியுள்ளது. இலத்திரனியல் ஒப்பந்தத் தயாரிப்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் உலகின் மிகப் பெரும் தயாரிப்பாளராக விளங்குகின்றது.[3] இதன் தலைமையகம் தைவானில் இருப்பினும் வருமானமீட்டும் பெரும்பாலான சொத்துக்கள் சீனாவில் உள்ளன. உலகளவில் பெரியளவில் வேலை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.[4][5] டெர்ரி கௌ இதன் நிறுவனரும் முன்னாள் தலைவரும் ஆவார்.
பாக்சுகான் முதன்மை அமெரிக்க, கனடிய, சீன, சப்பானிய மற்றும் பின்லாந்து நிறுவனங்களுக்கு இலத்திரனியல் பாகங்களை தயாரித்துக் கொடுக்கின்றது. பாகசுகான் தயாரித்து வழங்கும் கருவிகளில் முதன்மையாக பிளாக்பெர்ரி,[6]ஐ-பேடு,[7]ஐ-போன், ஐப்பாடு,[8]கிண்டில்,[9]நின்டென்டோ கேம்கியூப்பின் அனைத்து நிண்டெண்டோ விளையாட்டு அமைப்புகள், நோக்கியா கருவிகள், சிஸ்கோ சிஸ்டம்ஸ் கருவிகள், சோனி கருவிகள்,கூகுள் பிக்செல் கருவிகள், சவுமீ கருவிகள், மைக்ரோசாப்ட்டின் அனைத்து எக்ஸ் பாக்ஸ் கட்டுப்பாட்டுக் கருவிகள்,[10] உள்ளன. தவிரவும் பல கணினி மையப்பகுதி பொருந்துகைகளை, (குறிப்பாக TR4 CPU பொருந்துகை) தயாரித்து வழங்குகின்றது. 2012ஆம் ஆண்டில் பாக்சுகானின் தொழிற்சாலைகள் உலகின் நுகர்வு இலத்திரனியல் கருவிகளில் 40% வரை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்படுகின்றது.[11]