உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கிஸ்தான் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கிஸ்தான் புவியியல் - பாக்கிஸ்தானின் புவியியல் பல்வேறு நிலப்பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.பாக்கிஸ்தான் புவியியல் ஆய்வு நிறுவனம் நாட்டின் புவியியல் படிப்பிற்கு பொறுப்பான பிரதான நிறுவனம் ஆகும்[1]

டெக்டோனிக் மண்டலம்

[தொகு]

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளோடு பாக்கிஸ்தான் டெக்டோனிக் தகடு இணைந்திருக்கிறது.அங்கு சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் இந்திய தட்டுகளின் வடமேற்கு மூலையில் உள்ளன.இது பலூசிஸ்தான் மற்றும் கைபர்-பாக்தூன்க்வாவ யூரேசிய தட்டுக்குள்ளேயே உள்ளது.முக்கியமாக ஈரானிய பீடபூமி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.இதனுடைய வட பகுதிகள் மற்றும் ஆசாத் காஷ்மீர் மத்திய ஆசியாவில் உள்ளது,எனவே இரண்டு டெக்டோனிக் தகடுகள் மோதிக்கொண்டால் பல பூகம்பங்கள் வர வாய்ப்புள்ளது.

பூகம்பங்கள்

[தொகு]

டெக்டோனிக் தட்டுகளின் மையத்தில் இது இருப்பதால், பல ஆபத்தான பூகம்பங்கள் பாக்கிஸ்தானில் வர வாய்புள்ளது .

சுரங்க தொழில்

[தொகு]

சுரங்கப்பாதை பாக்கிஸ்தானில் ஒரு முக்கியமான தொழில் ஆகும்.நிலக்கரி, தாமிரம், தங்கம், குரோமைட், கனிம உப்பு, பாக்சைட் மற்றும் பல தாதுப்பொருட்கள் உட்பட பல கனிமங்களை பாக்கிஸ்தான் கொண்டுள்ளது.விலையுயர்ந்த மற்றும் அரை விலையுயர்ந்த கனிமங்களும் கூட வெட்டப்படுகின்றன.இவை பெரிடோட், அக்வாமாரீன், டோபஸ், ரூபி, மரகதம், அரிதான பூமி தாதுக்கள் மற்றும் பல வகைகள் மற்றும் குவார்ட்ஸ் வகைகள் அடங்கும்.பாக்கிஸ்தான் கனிம மேம்பாட்டு கூட்டுத்தாபனம் சுரங்கத் தொழில்துறையினருக்கு ஆதரவாகவும் மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பாகவும் செயல்படும்.பாகிஸ்தான் நவரத்தின கற்கள் கழகம் ஒரு அதிகாரப்பூர்வ நிறுவனம் பங்குதாரர்களின் நலன்களுகாக செயல்பட்டு வருகிறது.பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்களில் சிறப்பாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கிஸ்தான்_புவியியல்&oldid=3774150" இலிருந்து மீள்விக்கப்பட்டது