பாக்கித்தான் தேசிய நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் தேசிய நாள்
یوم پاکستان
Two JF-17 Thunders.jpg
மார்ச் 23, 2007இல் இஸ்லாமாபாத்தில் நடந்த படைத்துறை அணிவகுப்பில் இரண்டு ஜேஎப்-17 தண்டர் போர் வானூர்திகள்.
அதிகாரப்பூர்வ பெயர்உருது: یوم پاکستان
யோம்-இ-பாக்கித்தான்[Note 1]
கடைபிடிப்போர் பாக்கித்தான்
முக்கியத்துவம்பாக்கித்தான் முன்மொழியப்பட்டதையும் அரசியலமைப்பையும் இந்நாள் கொண்டாடுகின்றது.
கொண்டாட்டங்கள்முழுமையான இணை படையிடை அணிவகுப்பு, தேசிய விருதுகளை அளித்தல்
அனுசரிப்புகள்பாக்கித்தான் (மற்ற நாடுகளிலுள்ள பாக்கித்தானிய தூதரகங்களில்)
நாள்23 மார்ச்
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுக்கொருமுறை

பாக்கித்தான் தேசிய நாள் அல்லது பாக்கித்தான் நாள் (Pakistan Day, உருது: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் முன்மொழிவு நாள், அல்லது குடியரசு நாள், 1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக தனிநாடு முன்மொழியப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பின்பற்றப்படும் தேசிய விடுமுறை நாளாகும்.[1] தவிரவும் இதேநாளில் 1956இல் பாக்கித்தான் உலகின் முதல் இசுலாமியக் குடியரசாக மாறியதையும் குறிக்கின்றது. [2] இந்த நாளில் பாக்கித்தானின் படைத்துறைகள் இணைந்து படையிடை அணிவகுப்பை நடத்திக் கொண்டாடுகின்றன.[3]


1940ஆம் ஆண்டில் மார்ச் 23ஆம் நாள் இலாகூரில் தற்போதைய மினார்-இ-பாக்கித்தான் (பொருள். பாக்கித்தான் கோபுரம்) உள்ள இடத்தில் கூடிய முசுலிம் லீக் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கிலிருந்த நான்கு மாகாணங்களின் கூட்டமைப்பாக தன்னாட்சியுடைய கூட்டமைப்பு நிறுவப்பட வேண்டுமென்று அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது;[4][5][2][6] அந்தத் தீர்மானத்தில் பாக்கித்தான் என்ற பெயர் இடம்பெறவில்லை எனினும் அந்நாளை நினைவுகொள்ளும் வண்ணமே இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளைக் கொண்டாடும் விதமாக பாக்கிதானியப் படைகள் அனைத்தும் இணைந்து படையணிவகுப்பை நடத்துகின்றன.[3][7]

ஒளிப்படங்கள் தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. அலுவல்முறை பெயராக (உருது: Urdu: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் நாள் எனப்படுகின்றது. இந்த நாள் பாக்கித்தான் தீர்மான நாள், குடியரசு நாள் (Urdu: يوم جمهوريه) அல்லது இணைந்த படையிடை அணிவகுப்பு. அலுவல்சாராது, இந்த நாள் மார்ச் 23 என்றும் அறியப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Stacy Taus-Bolstad (April 2003). Pakistan in Pictures. Twenty-First Century Books. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8225-4682-5. https://books.google.com/books?id=K9QbtVadL_gC&pg=PA49. பார்த்த நாள்: 22 March 2011. 
  2. 2.0 2.1 John Stewart Bowman (2000). Columbia chronologies of Asian history and culture. Columbia University Press. பக். 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-11004-4. https://books.google.com/books?id=pg5Qi28akwEC&pg=PA372. பார்த்த நாள்: 22 March 2011. 
  3. 3.0 3.1 Agencies (23 March 2012). "Nation celebrates Pakistan Day today". The Nation. Archived from the original on 25 ஏப்ரல் 2012. https://web.archive.org/web/20120425203627/http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/national/23-Mar-2012/nation-celebrates-pakistan-day-today. 
  4. Olson, Gillia (2005). "Holidays". Pakistan : a question and answer book. Mankato, Minn.: Capstone Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0736837574. https://archive.org/details/pakistanquestion0000olso. பார்த்த நாள்: 23 March 2015. 
  5. Singh, Sarina et al. (2008). Pakistan & the Karakoram Highway (7th ). Footscray, Vic.: Lonely Planet. 
  6. Hasan Askari Rizvi (23 March 2015). "Pakistan and March 23". Express Tribune. Express Tribune, Rizvi. http://tribune.com.pk/story/857380/pakistan-and-march-23/. பார்த்த நாள்: 23 March 2015. 
  7. DAWN.com (23 March 2015). "Pakistan holds first Republic Day parade in seven years". Dawn. Dawn News, 2015. http://www.dawn.com/news/1171371. பார்த்த நாள்: 23 March 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]