உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
Pakistan in Sri Lanka in 2014
இலங்கை
பாக்கித்தான்
காலம் 6 ஆகஸ்ட் – 30 ஆகஸ்ட் , 2014
தலைவர்கள் அஞ்செலோ மாத்தியூஸ் மிஸ்பா-உல்-ஹக்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குமார் சங்கக்கார (323) சப்ராஸ் அகமது (265)
அதிக வீழ்த்தல்கள் ரங்கன ஹேரத் (23) ஜுனைத் கான் (9)
தொடர் நாயகன் ரங்கன ஹேரத் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அஞ்செலோ மாத்தியூஸ் (182) பவாட் ஆலம் (130)
அதிக வீழ்த்தல்கள் திசாரா பெரேரா (9) வகாப் ரியாஸ் (8)
தொடர் நாயகன் திசாரா பெரேரா (இல)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 ஆகத்து 6 தொடக்கம் 2014 ஆகத்து 30 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் மூன்று-ஒருநாள் போட்டிகளிலும் பங்குபற்றியது.[1] இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டிகளாக ஒரு ஒருநாள் முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றியது. இலங்கை அணி தேர்வுத்தொடரில் 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.

இலங்கை வீரர் மகேல ஜயவர்தனவிற்கு இம்முறை இடம்பெறும் தேர்வுப் போட்டிகள் அவர் விளையாடிய கடைசிப் போட்டிகள் ஆகும். இவர் தேர்வுப் போட்டிகளில் இருந்து விலகவிருப்பதாக 2014 சூலையில் அறிவித்தார்.[2]

இரண்டாவது தேர்வுப் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் இலங்கைப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுவே இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவரின் மிகத்திறமையான ஆட்டம் ஆகும்..[3]

அணிகள்[தொகு]

தேர்வுகள் ஒருநாள்
 இலங்கை[4]  பாக்கித்தான்  இலங்கை  பாக்கித்தான்

பயிற்சிப் போட்டி[தொகு]

பிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

ஆகத்து 20, 2014
10:00
அறிக்கை
இலங்கை பிரெசிடென்ட் XI அணி
325/7 (50 ஓவர்கள்)
 பாக்கித்தானியர்
290/8 (46.2 ஓவர்கள்)
பிரெசிடென்ட் அணி 13 ஓட்டங்களால் (ட/லூ முறையில்) வெற்றி
டிரோன் பெர்னாண்டோ அரங்கு, மொறட்டுவை
நடுவர்கள்: லின்டன் ஹானிபால் (இல), பிரதீப் உடவத்த (இல)
 • பிரெசிடென்ட் அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • வெளிச்சம் போதாமையினால் பாக்கித்தான் அணியின் ஆட்டம் 46.2 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு[தொகு]

6–10 ஆகத்து, 2014
(அறிக்கை)
451 (140.5 ஓவர்கள்)
யூனுஸ் கான் 177 (331)
தில்ருவன் பெரேரா 5/137 (31.5 ஓவர்கள்)
533/9 (163.4 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 221 (425)
சயீத் அஜ்மல் 5/166 (59.1 ஓவர்கள்)
180 (80.2 ஓவர்கள்)
சப்ராஸ் அகமது 52*
ரங்கன ஹேரத் 6/48 (30.2 ஓவர்கள்)
99/3 (16.2 ஓவர்கள்)
மகேல ஜயவர்தன 26 (35)
ஜுனைத் கான் 2/55 (8 ஓவர்கள்)
இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்கிலாந்து) & ஒக்சென்போர்ட் (ஆத்திரேலியா)
ஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத் (இலங்கை)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 • 3ம் நாள் ஆட்டத்தில் மழை காராணமாக 46 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
 • இப்போட்டியை அடுத்து, பன்னாட்டுத் தேர்வுத் தரவரிசையில் குமார் சங்கக்கார 920 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்தார்.[6]


இரண்டாவது தேர்வு[தொகு]

14–18 ஆகத்து, 2014
(அறிக்கை)
320 (99.3 ஓவர்கள்)
உபுல் தரங்க 92 (179)
ஜுனைத் கான் 5/87 (27 ஓவர்கள்)
332 (93.1 ஓவர்கள்)
சப்ராஸ் அகமது 103 (127)
ரங்கன ஹேரத் 9/127 (33.1 ஓவர்கள்)
282 (109 ஓவர்கள்)
சங்கக்கார 59 (130), மகேல 54 (137)
ரியாஸ் 3/76 (25 ஓ), அஜ்மல் 3/89 (46 ஓ)
165 (52.1 ஓவர்கள்)
சப்ராஸ் அகமது 55 (89)
ரங்கன ஹேரத் 5/57 (22.1 ஓவர்கள்)
இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத் இலங்கை
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மகேல ஜயவர்தன விளையாடிய கடைசித் தேர்வுப் போட்டி இதுவாகும்.[7]
 • முதலாவது இன்னிங்சில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் பெற்ற 9 விக்கெட்டுகள் (127 ஓட்டங்களில்) சாதனை தேர்வுத் துடுப்பாட்டத்தில் இடக்கை-பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற பெரும் சாதனை ஆகும்.[3]

ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]

1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

23 ஆகத்து, 2014
அறிக்கை
இலங்கை 
275/7 (45 ஓவர்கள்)
 பாக்கித்தான்
277/6 (44.5 ஓவர்கள்)
பாக்கித்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி (ட/லூ முறை)
மகிந்த ராசபக்ச அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே, எஸ். ரவி (இந்தியா)
ஆட்ட நாயகன்: சொகாயிப் மக்சூத் (பாக்கித்தான்)
 • பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

26 ஆகத்து, 2014
அறிக்கை
இலங்கை 
310/9 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
233 (43.5 ஓவர்கள்)
இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது

3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

30 ஆகத்து 2014
அறிக்கை
பாக்கித்தான் 
102 (32.1 ஓவர்கள்)
 இலங்கை
104/3 (18.2 ஓவர்கள்)
இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி (ட/லூ))
தம்புள்ளை அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), எஸ். ரவி (இந்)
ஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கை அணி வெறி பெற 101 எடுக்க வேண்டியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pakistan in Sri Lanka 2014". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 2. "Jayawardene to retire from Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 3. 3.0 3.1 "Sri Lanka v Pakistan: Rangana Herath takes nine wickets". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
 4. ESPN Cricinfo, Staff. "Chandimal, Mendis dropped for Pakistan Tests". www.espncricinfo.com. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
 5. Fidel Fernando, Andrew. "Lakmal out of Pakistan Tests". www.espncricinfo.com. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.
 6. டெஸ்ட் தரவரிசையில் குமார் சங்கக்கார முதலிடம்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 12, 2014
 7. Herath scripts perfect farewell for Jayawardene, கிரிக்கின்ஃபோ, ஆகத்து 18, 2014