பாக்கித்தான் ஆயுதப் படையில் பெண்கள்
பாக்கித்தான் ஆயுதப் படையில் பெண்கள் (Women in the Pakistan Armed Forces) என்பது பாக்கித்தானின் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளைப் பற்றியதாகும்.[1] பாக்கித்தான் நிறுவப்பட்ட பிறகு, 1947 முதல் பாக்கித்தான் ராணுவத்தில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில், முதல் பெண் போர் விமானி குழு பாக்கித்தான் வான்படையில் போர் விமான பணியில் சேர்ந்தது. பாக்கித்த்தான் கடற்படையானது பெண்கள் போர் கிளையில் பணியாற்றுவதை தடை செய்கிறது. மாறாக அவர்கள் கடற்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு போர் ஏற்பாடுகள் செய்யும், ஊழியர்கள், மூத்த நிர்வாக அலுவலகங்கள், குறிப்பாக பிராந்திய மற்றும் மத்திய தலைமையகங்களில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் பணியாற்றுகின்றனர். 2013இல் பாக்கித்தான் வான்படையின் போர் கிளைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சாதாரண இராணுவ வீரர்களகவோ, விமான வீரர்களாகவோ அல்லது மாலுமிகளாகவோ பெண்கள் ஆயுதப்படைகளில் சேர முடியாது. இந்தப் பணிகள் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். பெண்கள் பிற பணிகளை மட்டுமே பெற முடியும். 2017 வரை மொத்தம் 4,000 பெண்கள் ஆயுதப்படையில் பணியாற்றியுள்ளனர்.[2]
இராணுவத்தில் பெண்கள்
[தொகு]1930களிலும் 1940 களின் முற்பகுதியிலும், பாக்கித்தானைத் தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் பெண்கள் பாக்கித்தான் இயக்கத்தின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்தனர். பாக்கித்தானின் நிறுவனர்களில் பாத்திமா ஜின்னா, ரானா லியாகத் அலி கான்,சிரீன் ஜின்னா ஆகியோர் அடங்குவர்.
பேகம் ரானா
[தொகு]1948ஆம் ஆண்டில், பாக்கித்தானின் முதல் பெண்மணி பேகம் ரானா 1948இல் இந்திய-பாக்கித்தான் போரில் ஈடுபட்ட பாக்கித்தான் இராணுவத்திற்கான மருத்துவ மற்றும் தளவாடங்களை சேகரிப்பதற்காக 1948இல் பெண்கள் தன்னார்வ சேவையைத் தொடங்கினார்.[3] இது பாக்கித்தான் இராணுவ மருத்துவப் பிரிவில் பெண்கள் பிரிவை உருவாக்க வழிவகுத்தது. மேலும், பெண்களுக்கான போர் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இத்தகைய முயற்சிகள் பாக்கித்தானின் இராணுவத் தலைமை அதிகாரி பிராங்க் மெஸர்வியால் நிராகரிக்கப்பட்டன.[3] 1949ஆம் ஆண்டில், பேகம் ரானா தனிப்பட்ட முயற்சிகளை எடுத்து பாக்கித்தான் இராணுவ மகளிர் தேசிய காவலர் படையை நிறுவினார். முதலுதவி வழங்குதல், உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்தல், உடல்நலப் பிரச்சினைகள், தொற்றுநோய்களைக் கையாள்வதில் பெண்கள் பொறுப்புகளை ஏற்க ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், ஆடை, எல்லாவற்றிற்கும் மேலாக, தார்மீக மற்றும் உணர்ச்சி ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டனர்.[4] [5] அனைத்து மகளிர் பிரிவின் தலைமை கட்டுப்பாட்டாளரான பேகம் ரானா, படைப்பகுதித் தலைவர் என்ற கௌரவப் பதவியுடன் இருந்தார்.[3] இங்கு பணியாற்றும் அனைத்து பெண்களும் குடிப்படைகள் என்று விவரிக்கப்பட்டனர்.[4] ஆனாலும் இந்த அமைப்பு விரைவாக கலைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]20ஆம் நூற்றாண்டில், பெண்கள் சுறுசுறுப்பான போர் நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கணிசமான அளவு பெண் அதிகாரிகள் எதிகளின் பகுதிகளில் மருத்துவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவாக நிறுத்தப்பட்டனர். 2002ஆம் ஆண்டில், சாஹிதா மாலிக்[6] இரண்டு நட்சத்திர தகுதிக்கு உயர்த்தப்பட்டு முதல் பெண் படைத்துறைப் பணித்தலைவர் ஆனார்.[7] சாஜிதா பாட்சா படைத்துறைப் பணித்தலைவராக பதவி உயர்வு பெற்ற இரண்டாவது பெண்ணாவார்.
பாக்கித்தான் வான்படையில் பெண்கள்
[தொகு]2003ஆம் ஆண்டில், பாக்கித்தான் வான்படை[8] பெண்களை போர் விமானிகளாகப் பயிற்றுவிப்பதன் மூலம் ஒரு புதிய போர் திட்டத்தை தொடங்கியது.[9] 2006ஆம் ஆண்டில், பெண் போர் விமானிகளின் முதல் தொகுதி பாக்கித்தான் வான்படையின் போர் சேவைகளில் சேர்ந்தது.[9] பாக்கித்தான் வான்படை கழகத்தில் வெற்றிபெற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்போதைய இராணுவத் தலைமைத் தளபதி அஹ்சன் சலீம் ஹியாத் கௌரவ சான்றிதழ்களை வழங்கினார்.[9] பெண் போர் விமானிகள் எஃப் -7 போர் விமானங்கள், குண்டுவீச்சு, வான்வழி போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Front Desk. "Pakistan women officers visit NATO Headquarters". North Atlantic Treaty Organization. NATO Newsroom and North Atlantic Treaty Organization. பார்க்கப்பட்ட நாள் September 2, 2012.
- ↑ web desk (15 September 2018). "Women in Pak Military: A story of feminine valour in pictures". Pakistan Today.
- ↑ 3.0 3.1 3.2 Press. "Women In Pakistan Army". Story of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012.
- ↑ 4.0 4.1 Samra Amir (23 August 2014). "Flashback: Pakistan Women's National Guard". tribune.com.pk.
- ↑ Sarwat Ali (7 July 2019). "Life of the Begum". thenews.com.pk.
- ↑ "Dr Shahida becomes first woman general". DAWN.COM (in ஆங்கிலம்). 2002-06-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
- ↑ "Women in Pak Military: A story of feminine valour in pictures | Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ www.paf.gov.pk http://www.paf.gov.pk/. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ 9.0 9.1 9.2 "Pakistan gets women combat pilots". 30 March 2006. http://news.bbc.co.uk/2/hi/4861666.stm.
- ↑ "PAF Female Pilots complete Operational Conversion on F-7P fighter aircraft". Inter-Services Public Relations. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.