பாக்கித்தானில் ஆணவக் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தானில் ஆணவக் கொலைகள் (Honour killing in Pakistan) (கரோ-கரி என உள்நாட்டில் அறியப்படுகிறது ) உலகில் எந்த நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட ஆணவக் கொலைகள் பாக்கித்தானில் நடைபெறுகின்றன. உலகின் நடக்கும் ஆணவக் கொலைகளில் ஐந்தில் ஒரு பங்கு பாக்கித்தானில் நிகழ்கிறது (ஆண்டுக்கு 5,000 இல் 1,000).[1] ஆணவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, வண்புணர்ச்சி, முறைபிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் இக்கொலை நடக்கிறது.. பாதிக்கப்பட்டவரின் மரணம் குடும்பத்தின் நற்பெயரையும் மரியாதையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது.[2]

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாக்கித்தானில் ஆணவக் கொலை ஒரு நடைமுறையாக இருந்திருக்கலாம். சமீபத்திய சட்ட சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், இது பாக்கித்தானில் இன்றும் பொதுவான நடைமுறையாக உள்ளது.[3] சர்வதேச, பாக்கித்தான் ஆர்வலர்களும், ஆர்வலர் குழுக்களும் இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்துகின்றனர். இருப்பினும் சிலர் இந்த நடைமுறையை கண்டிக்கத் தேர்வு செய்யாவிட்டால் மாற்றம் உண்மையில் நடக்காது என்று சிலர் கூறுகிறார்கள்.[4]

பின்னணி[தொகு]

ஆணவக் கொலை என்பது ஒரு கொலைச் செயலாகும். இதில் ஒரு நபர் தனது உண்மையான அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைக்காக கொல்லப்படுகிறார். இத்தகைய "ஒழுக்கக்கேடான நடத்தை" திருமணத் துரோகத்தின் வடிவமாக இருக்கலாம். நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுப்பது, விவாகரத்து கோருதல், ஊர்சுற்றும் நடத்தை, வன்புணர்ச்சி போன்றவை.[5]:44 சந்தேகமும், குற்றச்சாட்டுகளும் மட்டுமே ஒரு குடும்பத்தின் கௌரவத்தை கெடுக்க போதுமானது. எனவே அந்தப் பெண்ணின் கொலைக்கு உத்தரவாதம் அளிக்க இதுவே போதுமானதாகிறது.[5]

ஆணாதிக்க கலாச்சாரங்களில், பெண்களின் வாழ்க்கை ஒரு மரியாதை குறியீட்டை கண்டிப்பாக பராமரிப்பதன் மூலம் கட்டமைக்கப்படுகிறது. பெண்ணின் கற்பை பாதுகாக்க, பெண்களின் நிலை, குடும்ப கௌரவம், அல்லது பர்தா, பாலினம் பிரித்தல் போன்ற கௌரவம் தொடர்பான சமூக கட்டுப்பாட்டு கலாச்சார நடைமுறைகளை பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.[5]:41 ஆண்வக் கொலைகள் குற்றவாளிகளின் கூறப்பட்ட சாக்குகளை விட மிகவும் சிக்கலானவை. பெரும்பாலும், இந்த கொலை பரம்பரை பிரச்சினைகள், பகை-தீர்வு அல்லது மனைவியை அகற்றுவதோடு தொடர்புடையது. உதாரணமாக மறுமணம் செய்வதற்காகவும் இது நடத்தப்படுகிறது. பாக்கித்தானில் மனித உரிமை அமைப்புகள் பலமுறை பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வலியுறுத்தின. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளத் தேர்வுசெய்தால், தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் இழக்க விரும்பாத சொத்துக்களை வைத்திருந்தனர்.[6]

பரவல்[தொகு]

மற்ற நாடுகளைப் போலவே, ஆணவவக் கொலைகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. பாக்கித்தானின் மனித உரிமைகள் ஆணையத்தில் 2017இல் 460 வழக்குகள் பதிவாகியுள்ளன. 194 ஆண்களும் 376 பெண்களும் பலியாகியுள்ளனர். [7] இந்தக் கொலைகளில், 253 சட்டவிரோத உறவுகளை மறுத்ததாலும், 73 திருமண விருப்பத்தை மறுத்ததாலும் தூண்டப்பட்டன.[7] கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களுடனான சந்தேகத்திற்குரிய உறவிலும், 93% குடும்ப உறவுகளிலும் இருந்தன.[7] இவை பெரும்பாலும் 2017ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட உண்மையான ஆணவக் கொலைகளின் ஒரு மாதிரி மட்டுமே என்றாலும், இது பாக்கித்தானில் ஆணவக் கொலைகளின் சிறப்பியல்புகளைப் பற்றிய ஒரு பார்வையைத் தருகிறது. ஆதாரங்கள் ஆண்டுதோறும் சரியான எண்ணிக்கையில் உடன்படவில்லை. ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் படி, பாக்கித்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 ஆணவக் கொலைகள் நடப்பதாக அறிய வருகிறது.[8]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistics & Data". Honour Based Violence Awareness Network. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  2. Goldstein, Matthew (2002). "The Biological Roots of Heat-of-Passion Crimes and Honor Killings". Politics and the Life Sciences 21 (2): 31. பப்மெட்:16859346. 
  3. Ijaz, Saroop (2017-09-25). "'Honor' Killings Continue in Pakistan Despite New Law". Human Rights Watch. பார்க்கப்பட்ட நாள் 2018-03-01.
  4. Siddiqi, Muhammad Khursheed. "The Punjab Protection of Women against Violence Act 2016: A Legislative Review". LUMS Law Journal 3: 100–118. https://sahsol.lums.edu.pk/sites/default/files/adjudicating_family_law_in_muslim_courts.pdf. பார்த்த நாள்: 2021-09-03. 
  5. 5.0 5.1 5.2 Khan, Ayesha (November 1999). "Mobility of women and access to health and family planning services in Pakistan". Reproductive Health Matters 7 (14): 39–48. doi:10.1016/S0968-8080(99)90005-8. 
  6. "Pakistan rejects pro-women bill". BBC News. 2005-03-02. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4311055.stm. 
  7. 7.0 7.1 7.2 "HRCP Archive | Search News". hrcpmonitor.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-02.
  8. "World Report 2017: Rights Trends in Pakistan". Human Rights Watch. 2017-01-12. Retrieved 2018-04-02.

வெளி இணைப்புகள்[தொகு]