பாக்கிசீரியசு பிரிங்கிலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கிசீரியசு பிரிங்கிலீ
பாக்கிசீரியசு பிரிங்கிலீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. பிரிங்கிலீ
இருசொற் பெயரீடு
Pachycereus pringlei
(S.Watson) Britton & Rose
வேறு பெயர்கள்

Cereus pringlei S.Watson[1]

மெக்சிக பெரிய கார்டோன் என்றும் யானைக் கள்ளி என்றும் அறியப்படும் பாக்கிசீரியசு பிரிங்கிலீ (Pachycereus pringlei) என்பது வடமேற்கு மெக்சிக்கோவைத் தாயகமாகக் கொண்ட ஒரு கள்ளி இனச் செடி. இது மெக்சிக்கோவின் பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா சுர், சொனாரா மாநிலங்களில் காணப்படுகிறது. இது பொதுவாக கார்டோன் என்று அறியப்படுகிறது.

மாபெரும் இந்த கள்ளிகள் இன்றளவும் காணப்பட்டாலும் பெரும்பாலானவை உழவுத் தொழில் செய்வதற்காக சொனாரா பகுதியில் அழிக்கப்பட்டு விட்டன. இக்கள்ளியின் பழமானது சொனாராவைச் சேர்ந்த செரி மக்களுக்கு ஒரு முக்கியமாக உணவு.[2] இவற்றின் வேர்களில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சைகளும் ஒன்றி வாழ்வதன் காரணமாக இவ்வினச் செடிகள் மண் இல்லாத வெறும் பாறையிலும் வளர இயலும். பாக்டீரியாவானது காற்றில் உள்ள நைட்ரசனை நிலைநிறுத்தி செடிக்குத் தேவையான ஊட்டச்சத்தினைத் தருகிறது.[3]

தோற்றக்குறிப்பு[தொகு]

இதுவே உலகின் மிக உயரமான கள்ளியினமாகும். இவ்வினச் செடி அதிகபட்சமாக 19.2 மீ (63 அடி) உயரம்[4] வரை இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் செடியின் அடித்தண்டின் விட்டம் மட்டுமே ஒரு மீட்டர். இதன் அடிப்பகுதியில் இருந்து பல கிளைகள் பிரிந்து செல்கின்றன. இது பார்ப்பதற்கு சகுவாரோ கள்ளியைப் போன்றே இருந்தாலும் இதன் கிளைகள் கள்ளியின் அடித்தண்டில் இருந்தே பிரியும். ஆனால் சகுவாரோ கள்ளியில் கிளைகள் கிட்டத்தட்ட கள்ளியின் நடுப்பகுதியில் இருந்து பிரியும். இதன் பூக்கள் பெரிதாக வெண்ணிறத்தில் இருக்கும்.

வாழ்நாளும் வளர்ச்சியும்[தொகு]

ஒரு முதிர்ந்த கார்டோன் கள்ளியானது சராசரியாக 10 மீட்டர் (30 அடி) உயரம் வரை வளரும். இருப்பினும் 18 மீட்டர் உயரமுள்ள கள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளன.[5] இது மிகவும் மெதுவாக வளரும் ஒரு செடி.[6] இதன் ஆயுள் நூறாண்டுகளில் அளக்கப்படுகிறது. அசோஸ்பைரில்லம் என்னும் பாக்டீரியா செடியின் துவக்ககாலத்தில் இருக்கும் போது வளர்ச்சியைத் தூண்டுகிறது.[7][8][9] பெரும்பாலான வளர்ந்த கள்ளிகள் பக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும். இதனால் இதன் அடிப்பகுதி பெரிய மரத்தின் அடிப்பகுதி போலப் பருத்து இருக்கும். இதனால் கள்ளியானது 25 டன் எடை வரை வளரக் கூடும்.[10]


படக்காட்சியகம்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Taxon: Pachycereus pringlei (S. Watson) Britton & Rose". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2003-08-29. Archived from the original on 2009-09-02. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
  2. *Felger, Richard; Mary B. Moser. (1985). People of the desert and sea: ethnobotany of the Seri Indians. Tucson: University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8165-0818-6. https://archive.org/details/peopleofdesertse0000felg. 
  3. Puente, M. E.; Y. Bashan, C. Y. Li, and V. K. Lebsky (September 2004). "Microbial populations and activities in the rhizoplane of rock-weathering desert plants. I. Root colonization and weathering of igneous rocks". Plant Biology (Stuttgart) 6 (5): 629–42. doi:10.1055/s-2004-821100. பப்மெட்:15375735. 
  4. Salak, M.. "In search of the tallest cactus". Cactus and Succulent Journal 72 (3). 
  5. (León de la Luz and Valiente 1994).
  6. (Roberts, 1989)
  7. (Bashan et al., 1999
  8. Carrillo et al., 2000
  9. Puente and Bashan, 1993
  10. (Gibson and Nobel, 1986).