பாக்கர் மாவட்டம்
பாக்கர் மாவட்டம்
بهكّر | |
|---|---|
மாவட்டம் | |
ஜாமியா தொழுகைப் பள்ளிவாசல், மன்கெரா | |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தின் அமைவிடம் . | |
| ஆள்கூறுகள்: 31°37′23″N 71°03′45″E / 31.6230°N 71.0626°E | |
| நாடு | பாக்கித்தான் |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | மியான்வாலி |
| நிறுவிய ஆண்டு | 1981 |
| தலைமையிடம் | பாக்கர் |
| வருவாய் வட்டங்கள் - 4 | பட்டியல்
|
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி- துணை ஆணையாளர்) |
| பரப்பளவு [1]:1 | |
| • மாவட்டம் | 8,153 km2 (3,148 sq mi) |
| மக்கள்தொகை (2023)[2] | |
| • மாவட்டம் | 19,57,470 |
| • அடர்த்தி | 240/km2 (620/sq mi) |
| • நகர்ப்புறம் | 3,52,434 |
| • நாட்டுப்புறம் | 16,05,036 |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 0453 |
| மொழிகள் | சராய்கி மொழி, பஞ்சாபி மொழி, உருது |
| இணையதளம் | bhakkar |
பாக்கர் மாவட்டம் (Bhakkar District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தின் மேற்கில் அமைந்த பாக்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பாக்கர் நகரம் ஆகும். பாக்கர் நகரம் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 379 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து]க்கு தென்மேற்கே 393 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தால் பாலைவனத்தில் அமைந்துள்ளது.[4]
மாவட்ட எல்லைகள்
[தொகு]பாக்கர் மாவட்டத்தின் தெற்கில் லய்யா மாவட்டம், தென்கிழக்கில் ஜாங் மாவட்டம், மேற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், வடக்கில் மியான்வாலி மாவட்டம், வடகிழக்கில் குசாப் மாவட்டம் மற்றும் கிழக்கில் ஜாங் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 313,311 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 19,57,470 ஆகும் . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 55.68% ஆகும்.[5][6]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 593,924 (30.35%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 352,434 (18.00%) மக்கள் வாழ்கின்றனர்.[5]
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 19,50,820 மக்களும், பிற சமயங்களை 6,650 மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் சராய்கி மொழியை 79.42%, பஞ்சாபி மொழியை 9.73% மக்களும், உருது மொழியை 7.5%, பஷ்தூ மொழியை 2.41% மற்றும் இதர மொழிகளை 1.94% மக்கள் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[9]

மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 4 வருவாய் வட்டங்களாகவும்[10], 64 ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
| வருவாய் வட்டம்[11] | பரப்பளவு
(km²)[12] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[13] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| பாக்கர் வட்டம் | 2,427 | 809,789 | 333.66 | 58.56% | ... |
| தாரியா கான் வட்டம் | 1,719 | 421,309 | 245.09 | 51.09% | ... |
| கலூர்கோட் வட்டம் | 2,239 | 415,708 | 185.67 | 55.43% | ... |
| மன்கெரா வட்டம் | 1,768 | 310,664 | 175.71 | 54.83% | ... |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1998 District Census report of Bhakkar. Census publication. Vol. 74. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
- ↑ "TABLE 1 : HOUSEHOLDS, POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. 2023.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ Bhakkar Tahsil - Imperial Gazetteer of India, v. 8, p. 43
- 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Pakistan Census 2023 Table 9: Punjab" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Pakistan Census 2023" (PDF).
- ↑ "Tehsils & Unions in the District of Bhakkar". Government of Pakistan website. 9 February 2012. Archived from the original on 9 February 2012. Retrieved 30 November 2022.
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).