பாக்கமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கமலை (Pakkamalai) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் செஞ்சிக்குத் தென்மேற்கில் அமைந்துள்ளது.

பாக்கமலை என்பது செங்குத்தான பீடபூமியாகும். இது 500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதோடு, இந்தியாவின் புனித காடுகளுள் ஒன்றாக உள்ளது. இந்த மலைச் சிகரங்களில் ஒன்றில் துர்கா தேவிக்கு ஓர் சன்னதியும், நடுப்பகுதியில் உயரத்தில் பெருமாள் (விஷ்ணு) க்கு ஒரு கோயிலும் உள்ளது.கிழக்கில் துருவன் கெங்கவரம் கோட்டை அருகில் கெங்கவரம் அருவி [1]உள்ளது

இப்பகுதியின் கோடைக்கால அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 36°C வரையிலும், குளிர்காலத்தில் 24°C ஆகவும். சராசரி ஆண்டு மழை 700மிமீ ஆகும். [2]

பாக்கமலை வனப்பகுதி 22.38 பரப்பளவைக் கொண்டுள்ளது km², [3] இந்த கடலோர வறண்ட பசுமை மலைக் காடுகள் கிழக்குப் பகுதியிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையின் மேற்பகுதியில் வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளது. இக்காடுகளில் குருந்து (அடலேட்டியா மோனோபைலா) , அக்கேசியா இண்டிசியா, கோம்டெரிடம் அல்பீடம், டைக்ரோசுடாகைசு சினெரியா, சைடிராக்சு டைகோகாகசு, மற்றும் பொதுவான வறண்ட நில உயிரினங்களான கோங்கம் (கோக்லோசெபர்மம் ரிலிஜியோசம்), டெக்கானியா புபெசென்சு, ஆறு நல்லி (காருகா பின்னேட்டா), கில்டெகாரிடா பாபுலிபோலியா, ஆச்சுனா லான்சோலட்டா, மற்றும் பிரேம்னா தொமெண்டோசா காணப்படுகின்றன. [4] இவ்விடத்திற்கே உரித்தான ஒரு சில உயிரினங்களும் இங்குக் காணப்படுகின்றன. [5] [6] இந்த வனத்தினைச் சுற்றியுள்ள தாழ் நிலங்களில் டெக்கான் முள் ஸ்க்ரப் காடுகளின் உள்ளன.



பாக்கமலை என்பது ராட்சத அணில் (ரதுஃபா மேக்ரூரா) வாழிடமாக உள்ளது. இந்த அணில் இதற்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், பழனி மலைகளிலும் மட்டுமே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [7]

2019ஆம் ஆண்டில், IUCN செம்பட்டியல் ஆபத்திற்குள்ளான இனமான அலங்கார மயில் சிலந்தி (போசிலோதெரியா மெட்டாலிகா) இம்மலைகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. Muralidharan (2014). "Angiosperm Diversity, Ethnobotany and Vegetational Analysis of a Sacred Forest near Gingee, Tamil Nadu, India" Doctoral Thesis.
  2. Pandi Karthik, Ayuthavel Kalaimani, and Rathinalingam Nagarajan (2018). "An inventory on herpetofauna with emphasis on conservation from Gingee Hills, Eastern-Ghats, Southern India". Asian Journal of Conservation Biology, July 2018. Vol. 7 No. 1, pp. 2-16.
  3. Karthik, Pandi & Kalaimani, Ayuthavel & Nagarajan, Rajarathinavelu. (2018). An Inventory on Herpetofauna with Emphasis on Conservation from Gingee Hills, Eastern-Ghats, Southern India. 7. 2-16.
  4. R. Muralidharan (2014). "Angiosperm Diversity, Ethnobotany and Vegetational Analysis of a Sacred Forest near Gingee, Tamil Nadu, India" Doctoral Thesis.
  5. N. Balachandrani, 2* and K. Rajendiran (2016). "Cordia ramanujamii (Cordiaceae): new species from Tamil Nadu, India". Taiwania 61(2): 74 ‒77 2016.
  6. Balachandran, N, K. Rajendiran & W.F. Gastmans (2015) Occurrence of three Western Ghats elements in dry evergreen forest of Gingee Hills, Eastern Ghats of Tamil Nadu, India. Journal of Threatened Taxa 7(14): 8177–8181; http://dx.doi.org/10.11609/jott.2433.7.14.8177-8181
  7. Prasad, S. (2018) "Over 300 nests of grizzled giant squirrel spotted near Gingee". The Hindu. 7 May 2019. Accessed 3 May 2020.
  8. Kothandapani Raman, Sivangnanaboopathidoss Vimalraj, Bawa Mothilal Krishnakumar, Natesan Balachandran, and Abhishek Tomar (2019). "Range extension of the Gooty Tarantula Poecilotheria metallica (Araneae: Theraphosidae) in the Eastern Ghats of Tamil Nadu, India". Journal of Threatened Taxa, 26 August 2019 11(10): 14373–14376. www.threatenedtaxa.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கமலை&oldid=3407646" இலிருந்து மீள்விக்கப்பட்டது