பாகூர் சு. சுப்பிரமணியம்
தோற்றம்
பாகூர் சு. சுப்பிரமணியம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | க. மு. இராசகோபால் |
| பின்னவர் | எஸ். ஜெகத்ரட்சகன் |
| தொகுதி | உத்திரமேரூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூலை 1932 தண்டலம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| முன்னாள் மாணவர் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
| தொழில் | சமூக சேவகர் |
பாகூர் சு. சுப்பிரமணியம் (Pakkur S. Subramaniam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மொறப்பாக்கத்தில் உள்ள தண்டலை கிராமத்தினை சார்ந்தவர். இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியினையும் சென்னை இலயோலாக் கல்லூரியில் இளங்கலைப் பட்ட படிப்பினைனையும் கற்றுள்ளார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பாக உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 6ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]