பாகிஸ்தான் ஆங்கில மொழி ஆசிரியர்கள் சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகிஸ்தான் ஆங்கில மொழி ஆசிரியர்கள் சமூகம் (SPELT) என்பது ஒரு தொழில் மன்றம். இது ஆங்கிலம் இரண்டாம் மொழி அல்லது வேற்று மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் சிறந்த தொடர்பு கலை மற்றும் பாகிஸ்தான் ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் தர நிலைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. 

அறிமுகம்[தொகு]

பாகிஸ்தான் ஆங்கில மொழி ஆசிரியர்கள் சமூகம் (SPELT) 1984-ம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் உருவாக்கப்பட்டது. ஆங்கில பாடம்; கற்பித்தல் மற்றும் போதனைகளை மேம்படுத்த இது அர்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கிடைக்கும் வரம்பிற்கு உட்பட்ட வளங்களை முடிந்த அளவு பயன்படுத்த பாகிஸ்தான் ஆங்கில மொழி ஆசிரியர்கள் சமூகம் உதவுகிறது. கற்பித்தல் தொழில் நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை குறித்து சிறந்த முறையில் போதிக்க முயற்சி செய்கிறது. அவை பாகிஸ்தானின் தேவைக்கும் வரம்புகளுக்கும் பொருந்துமாறு மாற்றிக் கொள்வதன் தேவையையும் கற்றுக்கொடுக்கிறது. இந்த மன்றம் பிற மொழி பேசுபவர்களுக்கான ஆங்கில ஆசிரியர்கள் (வுநுளுழுடு) மற்றும் ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான சர்வதேச சங்கம் (IATEFL) போன்ற சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. மேலும் பிரிட்டீஷ் கவுன்சிலின் உதவியுடன் செயல்படுகிறது..[1]

அமைப்பு :[தொகு]

ஆங்கில மொழி கற்பித்தல் கற்றல் தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் திறம்பட தகவல் பரிமாற்றம் செய்வதற்கும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பிப்பதற்கான நிபுணரை பாகிஸ்தானில் வழங்குவதே இந்த சமூகத்தின் நோக்கமாகும்.

செயல்பாடுகள் :[தொகு]

  •  ஆசிரியர் அபிவிருத்தி படிப்புகள்
  •  ஒவ்வொரு மாதமும் இரண்டு மணி நேர கல்வி அமர்வு 
  •  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாநாடு 
  •  படிப்புகள் மற்றும் மாநாடுகள் மூலம் உலகளவில் ஆசிரியர்கள் நெட்வொர்கிங்
  •  காலாண்டு அறிக்கையை பத்திக்கை மூலமாக வெளியிடுதல்
  • [2]

சர்வதேச மாநாடு :[தொகு]

இம்மாநாடு ஆசிரியர்கள் கற்பித்தல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி புரிந்து கொள்ளவும், இணைப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. கற்பித்தல் கோட்பாடு மற்றம் பயிற்சி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்ப்பதற்கும் அதை வலைதள வேலை செய்யவும் உதவுகிறது. இம்மாநாட்டில் சமர்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் பட்டறை வகுப்புகள் மற்றும் விளக்கக்காட்சிகள் போன்றவை வகுப்பறை நடைமுறைகளின் கருப்பொருள்கள் கற்பிப்போர் அணுகுமுறை மொழி கற்பித்தல் மற்றும் மொழி கற்றல் ஆய்வுகள் மேலும் மொழி கற்பித்தலுக்கும் மொழி கற்றலுக்கும் இடையிலான உறவுகள் உள்ளடக்கியதாக இருக்கும்.

= மேலும் காண்க லாகூர் பாக்கிஸ்தான் [தொகு]

  • ஆங்கில மொழி கற்றல் மற்றும் கற்பித்தல்
  • ஓரு வெளிநாட்டு மொழியாக ஆங்கிலம் கற்பித்தல்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • பாக்கிஸ்தான் ஆங்கில மொழி ஆசிரியர்கள் வலைத்தளம்
  • ஆசிரியர் கண்டுபிடிப்பான்