பாகிரதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகிரதி தேவி
Bhagirathi Devi
சட்டமன்ற உறுப்பினர் பீகார்
பதவியில்
2010
முன்னையவர்சந்திர மோகன் ராய்
தொகுதிஇராம் நகர்
பதவியில்
2000–2010
முன்னையவர்போலா இராம் தூபானி
பின்னவர்செயல்பாட்டில் இல்லை
தொகுதிசிக்கார்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1954 (1954-01-12) (அகவை 70)
நர்காட்டியாகஞ்ச், மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மாமிகான் ரவுத்
பிள்ளைகள்6
வாழிடம்(s)சிக்கார்பூர், மேற்கு சம்பாரண் மாவட்டம், பீகார்
வேலைஅரசியல்வாதி
சமூக சேவகர்

பாகிரதி தேவி (பிறப்பு 12 ஜனவரி 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பீகார் மாநிலம் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியின்சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] பகரிதி தேவி மேற்கு சம்பராண் மாவட்டம் நர்கதியாகஞ்சில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் 800 (US$10) சம்பளத்துடன் துப்புரவுப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

பாகிரதி தேவி பீகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாகிரதி மீண்டும் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏப்ரல் 2015-ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படாத பிரச்சினை தொடர்பாகப் பீகார் சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் அன்னு சுக்லாவுடன் பாகிரதி தேவி வாதிட்டார்.[3] பாகிரதி தேவி ஆரம்பத்தில் 2000 மற்றும் 2005-ல் தற்பொழுது செயல்படாத ஷிகர்பூரில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் ரயில்வே ஊழியரான மாமிகான் ரவுத்தை மணந்தார்.

விருது[தொகு]

2019ஆம் ஆண்டில், பாகிரதிக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[4]

சமூக பணி[தொகு]

பாகிரதி அங்கன்வாடி கேந்திரா (குழந்தை பராமரிப்பு மையங்கள்) மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் அலுவலகத்தைத் திறக்க அனுமதித்தார். நர்கதியாகஞ்ச் தொகுதியில் மகிளா சங்கதன்களை (பெண்கள் குழுக்கள்) உருவாக்கி, பெண்களை ஒருங்கிணைத்து, குடும்ப வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்முறை மற்றும் நியாயமான ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் இவர் தனது அரசியல் செயல்பாட்டை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தினார்,

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "From Proxies To Politicians: Bihar's Female MLAs". thequint. thequint. பார்க்கப்பட்ட நாள் 2011-01-15.
  2. "Sweeper-turned-MLA champion of rights". Deccan Herald. 11 June 2012.
  3. "Bihar Assembly adjourned after 2 rival women MLAs get into a fight". DNA India. 22 April 2015.
  4. "Padma awards for 2019 announced: Full list of awardees". 25 January 2019. https://www.thenewsminute.com/article/padma-awards-2019-announced-full-list-awardees-95673. பார்த்த நாள்: 28 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிரதி_தேவி&oldid=3677317" இலிருந்து மீள்விக்கப்பட்டது